நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த ஒரே வருடத்தில், மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி, இப்போது காதலி சோபிதாவுடன் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகியுள்ள நாக சைதன்யா பள்ளி பருவத்திலேயே தன்னுடைய காதலிக்கு முத்தம் கொடுத்த தகவலை ஓப்பனாக பேசியுள்ளார்.
25
Naga Chaitanya and Samantha Divorce
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைத்தாயாவின், விவாகரத்து குறித்த தகவல் வெளியான போது கூட, பலரால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் சமந்தா தான். சமந்தாவால் தான் பல பிரச்சனைகளை நாக சைதன்யா சந்தித்தார் என்றும், இதன் விளைவாகவே இந்த விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த அளவுக்கு பார்க்க ஒரு அப்பாவித்தனமான முகத்தை உடையவர் நாக சைதன்யா.
பார்ப்பதற்கு இந்த பூனையும் பால் குடியுமா? என்பது போல் சைதன்யா இருந்தாலும். இவர் ராணா நிகழ்ச்சியில் கூறியுள்ள தகவல், இவரு அப்போவே இப்படியா? என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. நாக சைதன்யா இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முதல் காதல் மற்றும் முதல் முத்தம் குறித்து ராணா டக்குபதியிடம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
45
Chaitanya About First Love and First Kiss
ராணா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், No.1 ராணா என்கிற தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைத்தாயாவிடம், முதல் காதல் குறித்து கேள்வி எழுப்பினார். இது குறித்து கூறிய நாக சைதன்யா, நான் 9ம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் என்னோடு படித்த ஒரு பெண்ணை காதலித்தேன். என் முதல் முத்தமும் அவரோடு தான் என தயங்கியபடியே கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், நாக சைதன்யா பக்கத்தில் இருந்த அவரது உறவினர், சுமந்த் இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து ராணா மூலம், நாக சைதன்யாவின் முதல் காதல் 14 வயதிலேயே துவங்கிவிட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.