முதன்முறை ரூ.1 கோடி சம்பளம்.. கமலும், விஜய்யும் செய்யாததை செய்த ரஜினி.. உருக்கமாக நன்றி சொன்ன சிவாஜி..

First Published | Aug 12, 2024, 12:28 PM IST

படையப்பா படத்தில் சிவாஜி நடித்த போது அவருக்காக ரஜினிகாந்த் செய்த செயல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Nadikar Thilagam Sivaji Ganesan

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என்றே அழைக்கப்படுகிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார். தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்த சிவாஜி, வயது மூப்பு காரணமாக ஹீரோவாக நடிப்பதில் இருந்து ஒதுங்கி குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

Sivaji

எப்படி ஹீரோவாக தனது தடத்தை வலுவாக பதித்தாரோ அதே போல் குணச்சித்திர வேடங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். அப்படி அவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலத்தில் எம்.ஜி.ஆர் ரூ.8 லட்சம் சம்பளம் பெற்றாராம். சிவாஜி கணேசன் ரூ.5 முதல் 6 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார். எனினும் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய பிறகு தயாரிப்பாளரிடம் சம்பளம் குறித்து பேசமாட்டாராம்.

Tap to resize

once more movie

இந்த கேரக்டருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவ்வளவு கொடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிடுவாராம். அந்த வகையில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ஒன்ஸ் மோர் படத்தில் விஜய் உடன் சிவாஜி கணேசன் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அப்போது ரூ.100 மட்டுமே அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு நடித்தாராம். பின்னர் படத்தின் வியாபாரம் முடிந்த உடன் எஸ்.ஏ.சந்திரசேகர் சிவாஜிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளார். 

thevar magan

அதே போல் கமல்ஹாசன், சிவாஜி கணேசன் இணைந்து நடித்த தேவர் மகன் படம் பலரின் ஃபேவரைட் படமாக உள்ளது.. தேவர் மகன் படத்திற்கு சம்பளத்தை சிவாஜி நிர்ணயிக்கவில்லையாம். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக சிவாஜி ரூ.20 லட்சம் சம்பளமாக பெற்றார். ஆனால் அதையும் படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு கொடுத்தால் போதும் என்று கூறியிருக்கிறார். அதன்படி அவருக்கு ரூ.20 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது. இது தான் சிவாஜி வாங்கிய அதிகபட்ச சம்பளம். 

Padayappa

1999-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் சிவாஜி முக்கிய கேரக்டரில் நடித்தார். மற்ற படங்களை போலவே இந்த படத்திற்கும் சிவாஜி சம்பளம் பேசவில்லையாம். உங்களுக்கு எவ்வளவு தோன்றுகிறதோ அதை கொடுங்கள் என்று சிவாஜி தயாரிப்பாளர் தேனப்பனிடம் கூறியுள்ளார். 

padayappa

இந்த படத்திற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் சம்பளம் தருவார்கள் என்று சிவாஜி எதிர்பார்த்திருந்தாராம். அதன்படி தயாரிப்பாளர் சிவாஜியிடம் சம்பளத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். அந்த காசோலையை வீட்டுக்கு கொண்டு சென்று தனது மூத்த மகன் ராம்குமாரிடம் வழங்கி உள்ளார். அப்போது தான் தனக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது தெரியந்துள்ளது. 

padayappa

அப்போது ரூ.10 லட்சத்தில் ஒரு பூஜ்ஜியத்தை தவறுதலாக போட்டிருப்பார்கள் என்று நினைத்து தயாரிப்பாளருக்கு போன் போட்டு பேசி உள்ளார். அப்போது தயாரிப்பாளர் “ இல்லை, நாங்கள் சரியாக தான் சம்பளத்தை போட்டுள்ளோம். உங்களுக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க சொல்லி ரஜினி தான் சொன்னார்.” கூறியுள்ளார். 

இதையடுத்து சிவாஜி கணேசன் ரஜினிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நடிகர் எவ்வளவு உச்சத்திற்கு சென்றாலும் மூத்த நடிகரை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு ரஜினி சிறந்த உதாரணம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Latest Videos

click me!