எம்.ஜி.ஆரால் நடுத்தெருவுக்கு வந்த சந்திர பாபு! சாவித்திரியால் மொத்தமும் போச்சு.! நெஞ்சை உருக்கும் Flash Back!

First Published | Aug 12, 2024, 12:24 PM IST

சினிமா மீது இருந்த காதலால், தன்னுடைய உயிரையே மாய்த்துக்கொள்ள துணிந்த தலைச்சிறந்த நகைச்சுவை நடிகரும், பாடகருமான, சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு காரணமான இருவர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

jp chandrababu

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சந்திரபாபுவின் உண்மையான பெயர் ஜோசப் பிச்சை. இவரை இவருடைய பெற்றோர் பாபு என்றே அழைத்து வந்தனர். சந்திரகுல வம்சத்தில் பிறந்த இவர், தன்னுடைய பெயரை சினிமாவுக்கு வந்த பின்னர் சந்திரபாபு என மாற்றிக் கொண்டார். சந்திரபாபுவின் தந்தை. ஜே பி ரோட்ரிக்ஸ் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். சுதந்திர வீரன் என்கிற பெயரில், பத்திரிக்கை ஒன்றையும் நடத்தி வந்தார். அப்போதைய பிரித்தானியா அரசுக்கு எதிராக இவர் எழுதிய கட்டுரைகள் ஏராளம். எனவே இவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்த பிரித்தானிய அரசு, சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சந்திரபாபுவின் தந்தையை கைது செய்தது மட்டுமின்றி, அவருடைய குடும்பத்தோடு இலங்கைக்கு நாடு கடத்தியது .அங்கும் அவர் ஒரு தமிழ் பத்திரிக்கையில் பணியாற்றினார்.

jp chandrababu

இலங்கையில் வாழும் சூழல் ஏற்பட்டதால், சந்திரபாபு படித்து வளர்ந்தது அனைத்தும் கொழும்பில் தான். பின்னர் சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டு, சென்னையில் குடி ஏறினர். சென்னையில் குடி ஏறிய பின்னர் சந்திரபாபுவின் தந்தை, தினமணி பத்திரிக்கையில் தான் பணியாற்றினார். மேலும் சிறு வயதில் இருந்தே, நாடகங்கள் மீதும், நடிப்பு மீதும், சந்திரபாபுவுக்கு இருந்த காத்ததால் தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக் கொள்ள, வேண்டும் என்கிற உணர்வை தூண்டியது. நடிக்க வாய்ப்பு கேட்டு பல சினிமா கம்பெனிகள் ஏறி இறங்கினார். வாய்ப்பு கொடுக்கப்படாததால், தன் வாய்ப்பு கேட்டு அலைந்த சினிமா கம்பெனி முன்பே தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனால் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் வரை, இந்த வழக்கு சென்றது. அப்போது நீதிபதியின் முன்னர் தீக்குச்சி ஒன்றால்... கையில் சுட்டு கொண்டு, நீதிபதியின் முன்பு காட்டி, உங்களுக்கு என் கையில் உள்ள காயம் தான் தெரியும், ஆனால் அதன் வலியையும், வேதனையையும் உங்களால் உணர முடியாது என கூறியுள்ளார். இதனால் நீதிபதியே ஆச்சர்யமடைந்தார்.

இது வீடா.. இல்ல மாடர்ன் அரண்மனையா! மதுரையில் மாஸாக நடிகர் சசிகுமார் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு

Tap to resize

jp chandrababu

பின்னர் 1947 ஆம் ஆண்டு, 'தன அமராவதி' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக திரை உலகில் அறிமுகமானார். சந்திரபாபு குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய ஈடு இணையற்ற நகைச்சுவையாலும், சிந்திக்க வைக்கும் பாடல்களாலும், குறுகிய நாட்களில் முன்னணி இடத்தை அடைந்தார். 1950 ஆம் ஆண்டுகளில் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க இவருடைய கால்ஷீட் கேட்டு வரிசையில் நின்ற இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஏராளம்.

jp chandrababu

சரோஜாதேவி, பத்மினி, போன்ற கதாநாயகிகள் சந்திரபாபுவுடன் இணைந்து நடித்துள்ளார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். இவருடைய வளர்ச்சி எந்த அளவில் இருக்கும் என்று. மேலும் தன்னுடைய திருமண வாழ்க்கையின் கனவு ஒரே நாளில் சிதைத்த நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஆர்வம்காட்டினார் . அந்த வகையில் 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்கிற படத்தை தயாரித்து இயக்கின் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. இவருடைய திரை வாழ்க்கையின் அஸ்தமனமும், இந்த படத்தில் இருந்து தான் துவங்கியது. 

"நான் அம்மாவாக போறேன்.. உங்க ஆசீர்வாதம் வேணும்" வளைகாப்பு போட்டோஸ் வெளியிட்டு அசத்திய இந்திரஜா சங்கர்!

jp chandrababu

ஒரு பக்கம் இவர் கதாநாயகனாக நடித்த படம் சரியாக போகாத நிலையில்,இவர் காமெடி வேடத்தில் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே சென்றது. தன்னுடைய வீழ்ச்சியில் இருந்து இருந்து எப்படியும் எழுச்சியை காண வேண்டும் என்கிற நோக்கில், சந்திரபாபு இயக்க வேண்டும் என்கிற முடிவில் இறங்குகிறார். சந்திரபாபு கமர்சியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதால், முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து அந்த படத்தை இயக்கம் முடிவு செய்தார்.

jp chandrababu

அதன்படி தன்னுடைய நண்பர் எம்ஜிஆரிடம், தான் எழுதிய கதையை 'மாடி வீட்டு ஏழை' என்கிற படத்தின் கதையை சந்திரபாபு கூற, கதை பிடித்து போனதால் எம்.ஜி.ஆர் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.  இந்த படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக நடிகை சாவித்திரி நடிகை. இருந்த படத்தின் பூஜை பண்ணை ஸ்டுடியோவில் போடப்பட்டது. பல லட்ச ரூபாய் செலவில் இப்படத்திற்காக செட் ஒன்றையும் சந்திரபாபு அமைத்தார். குறித்த தேதியில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், எம்ஜிஆர் நடிப்பை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருந்த சந்திரபாபு, இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பலமுறை எம்ஜிஆர் நடிப்பு தனக்கு திருப்திகரமாக இல்லை என கூறி ரீடேக்  கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான எம் ஜி ஆர் படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். இரண்டாவது நாளும் இதே நிலை தொடர அந்த இரண்டு நாட்கள் மட்டுமே 'மாடி வீட்டு ஏழை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

கயித்து கட்டிலில் காற்று வாங்கும் உடை.. கவர்ச்சி போஸில் கிராமத்து அழகியாக மாறிய பார்வதி நாயர் - ஹாட் பிக்ஸ்!

Actor MGR

பின்னர் எம்ஜிஆர் வேறு படங்களில் நடிக்க துவங்கிய நிலையில், எப்படியும் இந்த படத்தை எடுத்து முடித்து விடலாம் என நம்பி கொண்டிருந்தார் சந்திரபாபு. ஒரு பக்கம் இப்படத்திற்காக போட்ட பிரமாண்ட செட்டால் பல லட்சத்தை இழந்த சந்திரபாபு, பின்னர் ஸ்டுடியோவுக்கு கொடுக்க வேண்டிய வாடகையும் அதிகமாகி கொண்டே போனது. மீண்டும் எம்ஜிஆரை அங்கி சந்திரபாபு கால்ஷீட் கேட்க, தன்னுடைய அண்ணன் சக்கரபாணியிடம் பேசிக்கொள்ளும்படி கூறினார் எம்ஜிஆர்.
 

சக்கரபாணியை கால்ஷீட் காரணமாக சந்திரபாபு சந்தித்து பேசிய போது, இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் எம்ஜிஆரின் அண்ணனையே அடிக்க சென்றார் சந்திரபாபு. இது எம்ஜிஆர் காதுக்கு போக, இனி உன் படத்தில் என்னால் நடிக்கவே முடியாது என கூறினார். ஒரு வேலை இந்த படத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார் சந்திரபாபு மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார் என்பதே பலரது கருத்தாக தற்போது வரை இருந்து வருகிறது. சந்திரபாபு தோல்வியில் துவண்டு கொண்டிருந்த சமயத்தில் தான், சாவித்திரியின் வாழ்க்கையிலும் பூகம்பம் துவங்கியது. இருவரும் நண்பர்கள் என்பதால் எந்நேரமும் குடியில் மூழ்கி போகினர். எம்ஜிஆரால் பணத்தை இழந்த சந்திரபாபு... சாவித்திரியால் குடிக்கு அடிமையாகி மொத்தத்தையும் இழந்தார் என்பதே உண்மை.

Latest Videos

click me!