"நான் அம்மாவாக போறேன்.. உங்க ஆசீர்வாதம் வேணும்" வளைகாப்பு போட்டோஸ் வெளியிட்டு அசத்திய இந்திரஜா சங்கர்!
Indraja Shankar : கடந்த மார்ச் மாதம் பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
Actress Indraja
மேடை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.
Indraja RoboShankar
நடிகர் ரோபோ சங்கரின் மூத்த மகள் இந்திரஜா ரோபோ சங்கரும் திரைத்துறையில் பயணித்து வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தளபதி விஜயின் "பிகில்" திரைப்படத்தில் பாண்டியம்மா என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார்.
Robo Shankar
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கும் இந்திரஜாவுக்கும், அவருடைய உறவினர் கார்த்திக்கும் கடந்த மார்ச் மாதம் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த ஜோடி தாங்கள் விரைவில் அப்பா அம்மாவாக ஆகப்போவதை அண்மையில் அறிவித்தனர்.
Indraja
கர்பமாக இருப்பதால் தனது சொந்த ஊருக்கு செல்லவுள்ள நடிகை இந்திரஜா ரோபோ சங்கர், தானும் தனது கணவர் கார்த்தியும் பங்கேற்று வந்த Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
Mr and Mrs Chinnathirai
இன்று மாலை அவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் எபிசோடும் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் விஜய் டிவி, இந்திரஜா கார்த்திக்கு வளைகாப்பு சடங்கு செய்து அசத்தியுள்ளது. அந்த போட்டோக்கள் இப்பொது வெளியாகியுள்ளது.