அச்சு அசல் பிரசன்னாவின் ஜெராக்ஸ் காப்பி தான்... மகன் விஹானின் பிறந்தநாளை ஜம்முனு கொண்டாடிய நடிகை சினேகா

Published : Aug 12, 2024, 11:11 AM ISTUpdated : Aug 12, 2024, 11:26 AM IST

நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா ஜோடியின் மகன் விஹானின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.

PREV
16
அச்சு அசல் பிரசன்னாவின் ஜெராக்ஸ் காப்பி தான்... மகன் விஹானின் பிறந்தநாளை ஜம்முனு கொண்டாடிய நடிகை சினேகா
sneha son Birthday celebration

புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சினேகா. இவர் தமிழில் விஜய், சூர்யா, அஜித், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆன சினேகா, அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னா மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

26
sneha son Birthday celebration

சினேகா - பிரசன்னா ஜோடிக்கு கடந்த 2015-ம் ஆண்டு விஹான் என்கிற ஆண் குழந்தையும், 2020ம் ஆண்டு ஆத்யந்தா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் சில ஆண்டுகள் தலைகாட்டாமல் இருந்த சினேகா பின்னர் தனுஷின் பட்டாஸ் படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

36
sneha son Birthday celebration

அதைத் தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு மகள் பிறந்த பின்னர் சினிமாவில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சினேகா, தற்போது நடிகர் விஜய்யின் கோட் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக நடித்துள்ளார் சினேகா. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் செப்டம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்துறீங்க! வெளியானது டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் விமர்சனம்

46
sneha son Birthday celebration

அதுமட்டுமின்றி சின்னத்திரையிலும் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார் சினேகா. குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் தான் நடுவராக சிறந்த ஜோடியை தேர்வு செய்து வருகிறார். 

56
sneha son Birthday celebration

இந்நிலையில், நடிகை சினேகா, தன்னுடைய மகன் விஹானின் பிறந்தநாளை கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கிறார். அதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

66
sneha son Birthday celebration

சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன் விஹான் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதால் அந்த தீமில் அலங்கரிகக்ப்பட்டு இருந்தது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்தா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த அபிஷேக் பச்சன்

click me!

Recommended Stories