பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு ஆராத்யா என்கிற மகளும் இருக்கிறார். 17 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
24
Abhishek Bachchan wife Aishwarya Rai
இதற்கு வலு சேர்க்கும் வகையில் அண்மையில் நடந்து முடிந்த அம்பானி மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாகவும், அபிஷேக் பச்சன் தன் பெற்றோருடன் தனியாகவும் வந்திருந்தனர். இதனால் அவர்கள் விவாகரத்து கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற அளவுக்கு பேசத் தொடங்கினர். இப்படி ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடியின் விவாகரத்து விவகாரம் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், அண்மையில் வீடியோ ஒன்று வைரல் ஆனது.
அதில் அபிஷேக் பச்சன் தங்களது விவாகரத்து உண்மை தான் என பேசும்படியான காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதைப்பார்த்த ரசிகர்கள் உண்மை என நம்பி அந்த வீடியோவை வைரலாக்கினர். ஆனால் உண்மையில் அது ஒரு போலியான வீடியோவாம். டீப் ஃபேக் டெக்னாலஜியை பயன்படுத்தி சிலர் போலியாக அந்த வீடியோவை உருவாக்கி இருக்கின்றனர். இதை நடிகர் அபிஷேக் பச்சனே சமீபத்திய பேட்டியில் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
44
abhishek bachchan shuts divorce rumours with wife aishwarya rai
பாரிஸில் ஒலிம்பிக் போட்டியை காண சென்றிருக்கும் அவர், அங்கு அளித்த பேட்டியில், தனது திருமண மோதிரத்தை காட்டி நாங்கள் இப்பவும் தம்பதிகளாக தான் இருக்கிறோம். இதைப்பற்றி நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. நான் எதாவது சொன்னால் அது வேறுவிதத்தில் சென்றுவிடும். ஏன் இப்படி செய்கிறார்கள் என எனக்கு புரிகிறது. ஒரு பிரபலமாக இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் எனக்கூறி விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.