இது வீடா.. இல்ல மாடர்ன் அரண்மனையா! மதுரையில் மாஸாக நடிகர் சசிகுமார் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு

First Published | Aug 12, 2024, 7:42 AM IST

நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மதுரையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி இருக்கிறார் அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Sasikumar

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வருபவர் சசிகுமார். இவர் பாலாவின் சேது, அமீர் இயக்கிய மெளனம் பேசியதே, ராம் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சசிகுமார், கடந்த 2008-ம் ஆண்டு திரைக்கு வந்த சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானது மட்டுமின்றி அப்படத்தில் நடிகனாகவும் அசத்தி இருந்தார். அவர் இயக்கிய முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

sasikumar

சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் ஹீரோவாக நடித்தார் சசிகுமார். அப்படமும் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது. அதன்பின்னர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும் நடிக்க முடிவெடுத்த சசிகுமார், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, கிடாரி, வெற்றிவேல் என தொடர்ந்து கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டார்.

இதையும் படியுங்கள்... "குழந்தை பெத்துக்கிட்டு நான் செட்டில் ஆகப்போறேன்.. ஆசையோடு பேசிய சமந்தா.. ஆனா - மனமுருகி பேசிய பிரபலம்

Tap to resize

Sasikumar built new home

கடந்தாண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் சூரி உடன் இணைந்து துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படத்தில் மாஸான ரோலில் நடித்திருந்தார் சசிகுமார். கருடன் திரைப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து, இந்த ஆண்டு ஹிட் லிஸ்ட்டில் இணைந்திருந்தது.

sasikumar new home

இப்படி தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக கலக்கி வரும் சசிகுமார், தற்போது தன் சொந்த ஊரான மதுரையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். மதுரையில் உள்ள புது தாமரைப்பட்டி தான் நடிகர் சசிகுமாரின் பூர்வீக கிராமம். அங்கு தான் தற்போது சொகுசு பங்களா ஒன்றை கட்டி இருக்கிறார் சசிகுமார். அந்த வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்ல அரண்மனையா என கேட்கும் அளவுக்கு செம்ம மாஸாக உள்ளது.

இதையும் படியுங்கள்... வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை ஏற்படலாம்; கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

Latest Videos

click me!