ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கோட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், பார்வதி நாயர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.