ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கை தரும் மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மாதம் இதுவரை 10 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் யோகிபாபு நடித்த போட், பிரசாந்தின் அந்தகன், ஹலீதா ஷமீம் இயக்கிய மின்மினி ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதுதவிர வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதியும் மூன்று தரமான தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.
24
thangalaan
தங்கலான்
பா.இரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் கேஜிஎப்-பில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடித்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் டிமாண்டி காலனி. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை சுமார் 9 ஆண்டுகள் கழித்து வெளியிட உள்ளன. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் அர்ச்சனாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படமும் சுதந்திர தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக உள்ளது.
44
raghu thatha
ரகு தாத்தா
சுதந்திர தினத்தன்று தங்கலான், டிமாண்டி காலனி 2 படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு தமிழ் படம் ரகு தாத்தா. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். சுமன் குமார் இயக்கியுள்ள இப்படம் இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.