andhagan
1990-களில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த். சினிமாவில் விஜய், அஜித்துக்கு நிகராக வளர்ந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். பின்னர் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர், எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு நடித்த திரைப்படம் தான் அந்தகன்.
Andhagan Prasanth
அந்தகன் படத்தின் ஷூட்டிங் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அப்படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது. ஒரு கட்டத்தில் ஆண்டாண்டுக்கு தீபாவளி, பொங்கலுக்கு எந்தபட அப்டேட் வருகிறதோ, இல்லையோ, வாழ்த்து தெரிவித்து அந்தகன் பட போஸ்டர் மட்டும் தவறாமல் வெளியாகிவிடும். இந்த நிலையில், கடும் இழுபறிக்கு பின்னர் அந்தகன் திரைப்படத்தை கடந்த ஆக்ஸ்ட் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்தனர்.
Andhagan Box Office Collection
ரீமேக் படங்கள் பெரும்பாலும் சொதப்பலாக அமையும், ஆனால் அந்தகன் படத்தை நேர்த்தியாக ரீமேக் செய்து பிரசாந்துக்கு தரமான கம்பேக் படமாக கொடுத்திருக்கிறார் அவரது தந்தை தியாகராஜன். ரிலீஸ் ஆன முதல் நாளில் வெறும் ரூ.65 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த அந்தகன் படம், போகப்போக பாசிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியதால் பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகி உள்ளது. இரண்டாம் நாளில் முதல் நாளை விட டபுள் மடங்கு வசூல் அள்ளி இருக்கும் அப்படம் ரூ.1.15 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... "விஜய் இப்படி செய்வாருன்னு நினைச்சுக்கூட பார்க்கல.. எனக்கு ரொம்ப வருத்தம் தான்" - மனம் திறந்த மாரிசெல்வராஜ்!