"விஜய் இப்படி செய்வாருன்னு நினைச்சுக்கூட பார்க்கல.. எனக்கு ரொம்ப வருத்தம் தான்" - மனம் திறந்த மாரிசெல்வராஜ்!
Mariselvaraj : அண்மையில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் விஜய் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.
Kattrathu Tamil
"பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இயக்குனர் தான் மாரி செல்வராஜ். அதற்கு முன்னதாக பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக அவர் பணியாற்றி உள்ளார்.
Maamannan
இன்று தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களம் உள்ள திரைப்படங்களை கொடுத்து, மக்கள் மத்தியில் புகழ்பெற்று வரும் மாரி செல்வராஜ், இதுவரை வைகைப்புயல் வடிவேல் மேல் இருந்த "காமெடி கிங்" என்ற ஒரு பார்வையை தலைக்கீழாக மாற்றி, அவரை வேறு ஒரு பரிணாமத்தில் நடிக்க வைத்த திரைப்படம் நான் "மாமன்னன்".
Bison
தொடர்ச்சியாக தற்பொழுது "பைசன்" மற்றும் "வாழை" ஆகிய இரு திரைப்படங்களை அவர் இயக்கி வரும் நிலையில், அவருடைய "வாழை" திரைப்படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்பொழுது தளபதி விஜய் குறித்து பல விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.
Thalapathy vijay
"தளபதி விஜய்க்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன், இன்னும் சொல்லப்போனால் எனது இளமை காலத்தில் அவருக்காக மன்றங்களில் இணைந்து கூட பணியாற்றி இருக்கிறேன். அவருடைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் இந்த நிலையில், அவர் சினிமாவை விட்டு விலகுவது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. அவர் இப்படி செய்வார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்று கூறி உள்ளார்.