தங்கலான் பட பிரமோஷன் மொத்தமாக நிறுத்தம்; காரணத்தை கேட்டா உங்களுக்கே புல்லரிச்சிடும்

Published : Aug 11, 2024, 01:00 AM ISTUpdated : Aug 11, 2024, 07:06 AM IST

கேரளா மாநிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த தங்கலான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ள படக்குழு அதற்காகும் செலவை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

PREV
15
தங்கலான் பட பிரமோஷன் மொத்தமாக நிறுத்தம்; காரணத்தை கேட்டா உங்களுக்கே புல்லரிச்சிடும்
thangalaan

சியான் விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ளப் படம் தான் தங்கலான். ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் நிகழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

25
thangalaan Audio launch

ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்புகளை எகிறச்செய்துள்ள இப்படம் வருகின்ற 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தை வெற்றிபெறச் செய்வதற்காக படக்குழுவினர் படத்திற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

35
Thangalaan movie

அந்த வகையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழு தீவிரம் காட்டுகின்றது.

45
actor chiyaan vikram movie Thangalaan

அந்த வரிசையில், கேரளா மாநிலத்தில் படத்தின் புரமோசன் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த புரமோசன் பணிகளை திடீரென ரத்து செய்த படக்குழு, இந்த நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகையை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தது.

55
Thangalaan

அதன்படி புரமோசன் பணிக்காக திட்டமிடப்பட்டிருந்த ரூ.5 லட்சத்தை படக்குழு முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தி உள்ளது.

click me!

Recommended Stories