நல்லா சாப்பிட்டு 4 நாள் ஆகுது.. சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட ரசிகர்! 5 நிமிடங்களில் ஜிவி பிரகாஷ் செய்த செயல்!

First Published | Aug 10, 2024, 6:05 PM IST

நடிகர் ஜிவி பிரகாஷிடம், சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர் ஒருவர் சாப்பிட்டு 4 நாள் ஆச்சு என நெஞ்சை உருக்கும் விதமாக உதவி கேட்ட நிலையில். அவர் செய்துள்ள செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
 

GV Prakash Kumar

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் உடன் பிறந்த அக்காவின் மகன் தான் ஜிவி பிரகாஷ். சிறுவயதிலேயே 'ஜென்டில்மேன்', 'பம்பாய்' போன்ற திரைப்படங்களில் சிறு வயதிலேயே ஒரு பாடகராக பிரபலமான ஜிவி பிரகாஷ், அதன் பின்னர் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
 

GV Prakash music

படிப்பதை முடித்த கையேடு, ஒரு இசையமைப்பாளராக திரையுலகில் அவதாரம் எடுத்தார் ஜிவி. அதன்படி இவர் இசையமைத்த முதல் படமான 'வெயில்' படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, தற்போது வரை பல ரசிகர்களின் ஃபேவரட் பாடல்களாக உள்ளது. 

பனாரஸ் பட்டு புடவை... தலை நிறைய மல்லிகை பூவோடு தங்க சிலை போல் நடிகை மாளவிகா மோகனன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

Tap to resize

GV Prakash Kumar musical hit

பின்னர் ஜிவி இசையில் வெளியான பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, மதராசபட்டினம், ராஜா ராணி, அசுரன், சூரரைப் போற்று, ஆயிரத்தில் ஒருவன், போன்ற படங்களில் தன்னுடைய இசையால் மேஜிக் செய்திருந்தார்.
 

Thangalaan

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள தங்கலான் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ் தன்னுடைய கெரியரில் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்த திரைப்படங்களின் லிஸ்டில், இப்படமும் இணையும் என நம்புவதாக கூறி இருந்தார். 
'அந்தகன்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாரா நடிகர் பிரஷாந்த்! முதல் நாள் வசூல் விவரம் இதோ..!

Thangalaan Songs

ஜிவி பிரகாஷ் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள மினுக்கி மினுக்கி மற்றும் தங்களான் வார் போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தன்னுடைய கேரியரில் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜிவி, டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், கள்வன், டியர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 

Fan asked help

தற்போது இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன், போன்ற படங்கள் இவரின் கைவசம் உள்ளன. இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் 'நீக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து பதிவிட, அந்த பதிவின் கீழ் ரசிகர் ஒருவர் 'நானும் என் மனைவியும் 4 நாட்களாக சரியாக சாப்பிடவில்லை. 500 ரூபாய் GPay பண்ண முடியுமா? என கேட்க, ஜிவி பிரகாஷ் சட்டென உங்களின் GPay எண்ணை அனுப்புமாறு கேட்டார்.

பல்லாவரம் பொண்ணு பக்கத்துல நிக்க கூட முடியாது.. சோபிதாவை விட 10 மடங்கு சொத்துக்கு அதிபதியாக இருக்கும் சமந்தா!
 

Music Director GV Prakash kumar

அந்த நபரும், தன்னுடைய நண்பரின் GPay எண்ணை ஜிவிக்கு அனுப்ப, அவர் உடனடியாக 2500 ரூபாய் அவருக்கு அனுப்பி நன்றாக சாப்பிடுமாறு கூறி நெகிழ வைத்தார். தற்போது இதுகுறித்த தகவல் தான் சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
 

Latest Videos

click me!