90களில் தமிழ் சினிமாவில், விஜய் - அஜித்தை விட அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்துடன் இருந்தவர் பிரஷாந்த். அஜித் - விஜய் போன்ற இளம் ஹீரோக்கள் அப்போது கோலிவுட் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் அல்லாடி வந்த சூழலில், தன்னுடைய முதல் படமான 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தார் பிரசாந்த்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிரஷாந்த் நடித்தது மட்டுமின்றி, தமிழில் வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, எங்க தம்பி, திருடா திருடா, கிழக்கே வரும் பாட்டு, போன்ற பல படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி, ஹலோ, குட் லக், அப்பு , பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும், ஸ்டார், மஜ்னு, தமிழ், விரும்புகிறேன், வின்னர், போன்ற படங்கள் தற்போது வரை பல ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களாகும்.
பல்லாவரம் பொண்ணு பக்கத்துல நிக்க கூட முடியாது.. சோபிதாவை விட 10 மடங்கு சொத்துக்கு அதிபதியாக இருக்கும் சமந்தா!
நடிகர் பிரசாந்த் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஜானி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதன் பின்னர் சில வருடங்கள் தன்னுடைய நடிப்புக்கு பிரேக் விட்டவர், தெலுங்கில் ராம்சரண் நடித்த 'வினைய விதைய ராமா' மற்றும் தற்போது விஜய்யுடன் சேர்ந்து 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.