2-வது கல்யாணம் பண்ணாலும் நாக சைத்னாயாவின் வாழ்வில் தவிர்க்க முடியாத பெண் சமந்தா.. ஏன் தெரியுமா?

First Published | Aug 10, 2024, 2:52 PM IST

நாக சைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள உள்ள சோபிதா துலிபாலாவின் தங்கை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா கடந்த 2017-ம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இந்த திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. சமந்தா – நாக சைதன்யா ஜோடி 2021-ம் ஆண்டு விவகாரத்து பெற்று  பிரிந்துவிட்டனர். சமந்தாவுக்கு நாகார்ஜுனா குடும்பம் சார்பில் ரூ.200 கோடி ஜீவனாம்சமாக கொடுக்கப்பட்டதாகவும் அதை பெற்றுக்கொள்ள சமந்தா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சமந்தாவை பிரிந்த பிறகு நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக இருந்த இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது, நாக சைதன்யாவும் சோபிதாவும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இருவரும் ஒன்றாக பொதுவெளியில் காணப்படும் புகைப்படங்களும் வெளியானது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தனர். 

Tap to resize

இந்த நிலையில் திடீரென இந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடந்த 8-ம் தேதி நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்தது. மேலும் நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் இதுதொடர்பான புகைபடங்களும் செய்திகளும் வெளியான வண்ணம் உள்ளது.

sobhita Dhulipala sister samantha

அந்த வகையில் தற்போது சோபிதா தங்கை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தா தானாம். மருத்துவரான இவருக்கு கடந்த ஆண்டே திருமணம் நடைபெற்றது. தனது தங்கை சமந்தாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோபிதாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Samantha

மேலும் ஊடகங்களிலும் வெளியானது. தங்கை சமந்தா துலிபாலாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த ஆண்டு சோபிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நாக சைதன்யாவின் தனது முன்னாள் மனைவி சமந்தாவை பிரிந்துவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் அவர் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பெயராக சமந்தா மாறி உள்ளது. 

Latest Videos

click me!