பல்லாவரம் பொண்ணு பக்கத்துல நிக்க கூட முடியாது.. சோபிதாவை விட 10 மடங்கு சொத்துக்கு அதிபதியாக இருக்கும் சமந்தா!

Published : Aug 10, 2024, 02:17 PM IST

நாக சைதன்யாவின் வருங்கால மனைவியும், நடிகையுமான சோபிதாவிட... 10 மடங்கு சொத்துக்கு அதிபதியாக இருக்கும் சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
110
பல்லாவரம் பொண்ணு பக்கத்துல நிக்க கூட முடியாது.. சோபிதாவை விட 10 மடங்கு சொத்துக்கு அதிபதியாக இருக்கும் சமந்தா!
Samantha

நடிகை சமந்தா பாலிவுட் திரை உலகம் வரை பிரபலமானவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியில் தான். இதனை பலமுறை அவரே மிகவும் பெருமையோடு கூறி உள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடி பல கம்பெனிகளில் ஏறி இறங்கிய போதும், கிடைக்கும் வாய்ப்பில் நடிக்க நினைக்காமல் தரமான படத்தில் நடிக்க வேண்டும் என காத்திருந்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான தெலுங்கு படமான 'ஏ மாயா சேசாவா' படத்தில் நடித்தார்.
 

210

இந்த படம் தமிழில் சிம்பு, திரிஷா, நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்கிற பெயரில் வெளியானது. மேலும் இந்த படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். சமந்தாவின் அழகும், திறமையான நடிப்பும் முதல் படத்திலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று கொடுத்தது. தெலுங்கு திரையுலகை தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆர்வம் காட்டினார். அந்த வகையில், பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வாவுக்கு ஜோடியாக 'பானா காத்தாடி' திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நாக சைதன்யா மீதான காதலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய சோபிதா துலிபாலா! வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு! 
 

310

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சற்று தடுமாறினாலும், பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக கத்தி, தெறி, மெர்சல் என மூன்று ஹிட் படங்களில் நடித்தார். விஜய் மட்டுமின்றி தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகிகள் ஒருவராக மாறினார்.
 

410

முன்னணி நடிகையாக இருக்கும் போதே, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சமந்தாவின் குடும்ப வழக்கப்படி கிறிஸ்தவ முறை படியும், நாகசெய்தன்யா குடும்ப வழக்கப்படி இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது.

சின்னத்திரை சீரியல் நடிகை விஜே சித்ராவின் தற்கொலை வழக்கு! ஹேம்நாத் உட்பட 7 பேரை விடுதலை செய்தது நீதிமன்றம்!
 

510

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தினாலும் ஒரு அன்பான மனைவியாகவும் பொறுப்பான மருமகளாகவும் திரையுலகினரை ஆச்சரியப்படுத்திய சமந்தா, பலரும் பொறாமைப்படும் விதத்தில் இருந்தார். ஆனால் யார் கண் பட்டதோ சமந்தாவின் திருமண வாழ்க்கை நான்கே வருடத்தில் முடிவுக்கு வந்தது. நாக சைதன்யாவுடன் மீண்டும் சமந்தாவை சேர்த்து வைக்க பலர் போராடிய நிலையில், இருவருமே தங்களின் பிரிவில் உறுதியாக இருந்ததால் விவாகரத்துசெய்து பிரிந்தனர்.
 

610

விவாகரத்துக்கு பின்னர் சமந்தா தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்திய போது, திடீர் என மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். தற்போது அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் சினிமாவில்  கவனம் செலுத்த துவங்கியுள்ளார் சமந்தா. மேலும் சமந்தாவை பிரிந்த ஒரே வருடத்தில் சோபிதாவை, சைதன்யா காதலிக்க துவங்கினார் என ஒருபுறம் கூறப்பட்டாலும், மற்றொரு தரப்பினர் சமந்தாவை விவாகரத்து செய்ய காரணமே சோபிதா தான் என்கிற ஒரு தகவலும் உலா வர துவங்கியுள்ளது.

வயநாடு நிலச்சரிவு.. மீனா, குஷ்பூ உள்ளிட்ட 80'ஸ் நடிகைகள் முதல்வரை சந்தித்து நிவாரண நிதி வழங்கினர்!
 

710

சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர், தென்னிந்திய திரை உலகை தாண்டி... பாலிவுட், ஹாலிவுட் லெவலுக்கு  சமத்தா பட வாய்ப்புகளை கைபற்றி நடிக்க துவங்கியுள்ளார். ஒரு படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை தற்போது சம்பளமாக பெரும் சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை, சோபிதா சொத்துடன் சிலர் ஒப்பிடும் வருகிறார்கள்.
 

810

நடிகை சமந்தாவுக்கு தற்போதைய தகவலின் படி 110 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மும்பை, ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களில் இவருக்கு சொந்தமாக ஆடம்பர வீடுகள் உள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள இவரின் வீடு பல கோடி மதிப்பு கொண்டது என கூறப்படுகிறது. இதை தவிர 5 சொகுசு கார்களை வைத்துள்ளார். 2 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட லோன் ரோவர், ஆடி, ஜாகுவார் போன்ற சொகுசு கார்களும் அடங்கும். 

கவர்ச்சி உடையில்... மனதை மயக்கும் மயிலாஞ்சி! நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
 

910

 சினிமாவை தாண்டி பிசினஸிலும் ஆர்வம் காட்டும் சமந்தா, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சாஹி என்கிற ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல் மழலைப் பள்ளி ஒன்றியும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக இவருக்கு வருடத்திற்கு 1 கோடிக்கு மேல் வருவாய் வருவதாக கூறப்படுகிறது.
 

1010

மேலும் சமந்தாவின் சொத்துக்களுடன் ஒப்பிடும்போது, சோபிதா பக்கத்தில் கூட நிற்க முடியாதாது என சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது. காரணம் சோபிதா மொத்தமாகவே 7 முதல் 10 கோடி வரை மட்டுமே சொத்துக்களை வைத்துள்ளார். இவரின் சொத்துகளுடன் ஒப்பிடும் போது... சாமந்தா 10 மடங்கு அதிக சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடி சென்று கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்! என்னால் நடிக்க முடியாது.. சூரி கூறிய அதிர்ச்சி காரணம்!
 

Read more Photos on
click me!

Recommended Stories