சிவப்பு நிற பனாரஸ் பட்டு புடவையில், தலை நிறைய மல்லிகை பூ வைத்து தங்கலான் பட நாயகி மாளவிகா மோகனன் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மாளவிகா மோகனனின் தந்தை ஒரு கே.யு.மோகனன், ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால், சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை மாளவிகா மோகன் மனதில் உதிக்க, படித்து முடித்த கையேடு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'பட்டம் போலே' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
27
Tamil movie
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தி, கன்னடம், போன்ற மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. மற்ற மொழிகளில் ஹீரோயினாக நடித்தாலும், தமிழில் இவருக்கு கிடைத்தது சப்போர்டிங் ரோல் தான்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என இவருக்கு பலர் அறிவுரை கூறிய போதும், இது ரஜினிகாந்த் படம் என்கிற ஒரே காரணத்தால் இப்படத்தில் நடித்ததாக கூறி இருந்தார்.
47
Malavika Mohanan Trolls
இந்த படத்தை தொடர்ந்து அதிரடியாக, தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் மாளவிகா மோகன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை என்றாலும், மாளவிகாவின் ரோல் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. குறிப்பாக இவர் இந்த படத்தில் நடித்ததை வைத்து பல ட்ரோல்கள் வெளியான போது அதனை மாளவிகா மோகனன் என்ஜாய் செய்தது வேற லெவலில் பார்க்கப்பட்டது.
தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாறன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில்.. தமிழ் படங்களில் கதைகளில் கூடுதல் கவனதுடன் தேர்வு செய்ய துவங்கினார்.அதன்படி தற்போது மாளவிகா மோகனன் நடித்து முடித்துள்ள திரைப்படம், 'தங்கலான்'.
67
Thangalaan Release
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் மாளவிகா சூரியக்காரி வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்... மாளவிகா மோகனன் பனாரஸ் பட்டு புடவை கட்டி, தலைநிறைய மல்லி பூ வைத்து எடுத்து கொண்ட போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.