ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்துறீங்க! வெளியானது டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் விமர்சனம்

First Published | Aug 12, 2024, 10:17 AM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.

demonte colony 2

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. அவர் கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த டிமாண்டி காலனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்த அப்படம் தனித்துவமான கதையம்சத்துடன் உருவாகி இருந்ததால் ரசிகர்களை கவர்ந்ததோடு, பிளாக்பஸ்டர் ஹிட்டும் ஆனது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கத்தில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

demonte colony 2 from August 15

நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இமைக்கா நொடிகள் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் உடன் கூட்டணி அமைத்த அஜய் ஞானமுத்து, அவரை வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்கினார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்... இது வீடா.. இல்ல மாடர்ன் அரண்மனையா! மதுரையில் மாஸாக நடிகர் சசிகுமார் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு

Tap to resize

demonte colony 2 Arulnithi

கோப்ரா படத்தின் தோல்விக்கு பின்னர் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த அஜய் ஞானமுத்து, தற்போது டிமாண்டி கலானி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிமாண்டி காலனி 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

demonte colony 2 First Review

இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், முதல் விமர்சனத்தையும் கூறி இருக்கிறார். அவர் பதிவிட்டுள்ளதாவது. “வாவ்... டிமாண்டி காலனி 2 என்ன ஒரு அருமையான திரைக்கதை, ஆகஸ்ட் 15ந் தேதி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அஜய் ஞானமுத்துவின் திரைக்கதையை பற்றி தான் பேசப்போகிறார்கள். மகாராஜாவுக்கு பின் டிமாண்டி காலனி 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியதில் நாங்கள் மிகவும் லக்கி என குறிப்பிட்டுள்ளார்.

demonte colony 2 movie first review out

மற்றொரு பதிவில், டிமாண்டி காலனி 2 மாதிரில் ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இரண்டரை மணிநேரமும் என் போனை நான் எடுக்கவில்லை, சீட் நுனியில் அமர்ந்து தான் படம் பார்த்தேன். தற்போது விமர்சகர்களுக்காக வருந்துகிறேன், எப்படி டிமாண்டி கலானி 2 படத்தில் குறை கண்டுபிடிக்கப்போகிறார்கள் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்துறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்தா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த அபிஷேக் பச்சன்

Latest Videos

click me!