கார்த்தியை இப்படி ஒளிச்சி வச்சிருக்கீங்களே... கங்குவா டிரைலரில் இதையெல்லாம் நோட் பண்ணிங்களா?

First Published | Aug 12, 2024, 2:02 PM IST

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதில் ஒளிந்திருக்கும் சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

kanguva suriya

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. கங்குவா படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமும், ஆச்சர்யமும் நிறைந்த அந்த டிரைலரில் சில விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

kanguva karthi

கங்குவா டிரைலரில் சூர்யா, பாபி தியோல் பற்றிய காட்சிகள் அதிகளவில் இடம்பெற்று இருந்தாலும், அதில் ஒரே ஒரு பிரேமில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் கடந்து சென்றிருக்கிறார் கார்த்தி. கங்குவா படத்தில் கார்த்தி நடிக்கும் தகவல் அண்மையில் வெளியானது. அவரது கதாபாத்திரம் சீக்ரெட்டாகவே வைக்கப்பட்டு உள்ளது. அதே சீக்ரெட்டை டிரைலரிலும் மெயிண்டேன் செய்துள்ளனர். கார்த்தி குதிரையில் வரும் காட்சியை பிளர் செய்து காட்டி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்.... பாகுபலியையே மிஞ்சும் பிரம்மாண்டம்... மாஸ் காட்சிகளுடன் வெளியானது சூர்யாவின் கங்குவா டிரைலர்

Tap to resize

kanguva movie hidden details

கங்குவா ஆக்‌ஷன் நிறைந்த படம் என்பது அதன் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. அந்த படத்தில் ஹைலைட்டான ஆக்‌ஷன் காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கிறது. அதுதான் முதலை ஃபைட். அந்த காட்சியில் நீருக்கடியில் முதலையை குத்திக் கொன்று அதை வெறியோடு சூர்யா தூக்கி வீசுகிறார். நிச்சயம் இந்தக் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கும்.

suriya

கங்குவா திரைப்படத்தின் டிரைலர் முழுக்க சரித்திர காட்சிகள் மட்டுமே இடம்பெற்று உள்ளது. ஆனால் இப்படத்தில் நிகழ்கால காட்சிகளும் உள்ளன. அந்த காட்சி ஒன்று கூட இடம்பெறாததால், படத்தில் அது நிச்சயம் சர்ப்ரைஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிகழ்கால காட்சிகளில் தான் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kanguva movie trailer

கங்குவா படத்தில் நடிகர் சூர்யா ஒரு பழங்குடியின மக்களின் அரசனாக இருக்கிறார் என்பது அதன் காட்சிகள் மூலமே தெரிகிறது. தன் மக்களை எதிரியான பாபி தியோலிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஒரு மக்களின் தலைவனாக சூர்யா நடித்திருக்கிறார். 

இதையும் படியுங்கள்.... 14 வயசு... 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே முதல் காதலில் விழுந்த நாக சைதன்யா! முதல் முத்தம் குறித்து ஓப்பன் டாக்!

Latest Videos

click me!