நடிகை நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை 2015-ஆம் ஆண்டு காதலிக்க துவங்கினார். அதாவது விக்னேஷ் சிவன் இயக்கிய, 'நானும் ரௌடிதான்' படத்தில் நடிக்கும் போது... விக்கி - நயன் இடையே ஏற்பட்ட நட்பு, இந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு முன்பே காதலாக மாறியது.
28
Nayanthara love Failure
இதனை இப்படத்தில் நடித்த பார்த்திபன் கூட ஒருமுறை மேடையிலேயே கூறி இருப்பார். அதே போல் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்ததன் முக்கிய காரணம் இவரின் தோற்றம் என்றும் பல தகவல்கள் வெளியாகின. 'நானும் ரௌடிதான்' படத்தில் நயன்தாரா நடித்து கொண்டிருந்த சமயத்தில் பிரபு தேவாவின் காதல் தோல்வியால் துவண்டு கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் தான் விக்கினின் நட்பும், அவர் காட்டிய அக்கறையும் நயன் மனதில் மீண்டும் காதலை விதைத்தது. மேலும் விக்கி பார்ப்பதற்கு, தாடியோடு பிரபு தேவா சாயலில் இருந்ததால்... நயன் அவருடைய தோற்றதால் கவரப்பட்டார். பின்னர் இவர்களின் காதல் லிவிங் ரிலேஷன்ஷிப் வரை வளர்ந்தது.
48
Nayanthara and vignesh shivan dating:
ஒரு கட்டத்தில் நயன்தாரா - விக்கி இருவருமே... அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று டேட்டிங் செய்ய துவங்கினார். குறிப்பாக இவர்கள் இருவரின் பிறந்தநாள் என்றால், வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்கள். நயன்தாரா ஏற்கனவே பிரபு தேவாவுக்காக மதம் மாறும் வரை சென்று... இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்ததால், இந்த காதலும் பிரேக்கப்பில் முடிய வாய்ப்புள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால் நயன் - விக்கி இருவரும் காதலிக்க துவங்கிய ஒரே வருடத்தில் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாக சரகேசி பிரச்சனை வந்தபோது, நீதி மன்றத்தில் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.
68
Nayanthara is lovable mother
மேலும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆன பின்னரே... வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று கொண்டதாகவும் தெரிவித்தனர். குழந்தை பிறந்த பின்னர், ஒரு பொறுப்பான அம்மாவாகவும் இருந்து வரும் நயன்தாரா தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுளளார்.
இதில் நயன்தாரா தன்னுடைய இரட்டை குழந்தைகள் மீதும் பாசத்தை பொழிவது மட்டும் இன்றி, அவர்களுக்கு விளையாட்டு காட்டுவது, கட்டி அரவணைத்து கொள்வது போன்ற புகைப்படங்கள் உள்ளன.
88
Nayanthara spent time with babies
நயன்தாரா தன்னுடைய வேலைக்கு செல்வதற்கு முன், சில மணிநேரம் குழந்தைகளுடன் விளையாடியபோது என கூறி, இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்ணே பட்டு விடும் போல் இருப்பதாக இந்த கியூட் புகைப்படங்களுக்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.