மணிரத்னம் படத்தில் நடித்த பின் எனது ஆசையே இதுதான்.. தென்னிந்திய சினிமாவை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்..

First Published | Aug 12, 2024, 6:52 PM IST

மணி ரத்னத்தின் தில் சே படத்திற்குப் பிறகு தென்னிந்திய படத்தில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டதாகவும் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்

Shahrukh khan

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் கடந்த ஆண்டு 2 பிளாக்பஸ்டர் படங்களை வழங்கினார். ஒன்று சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான். மற்றொரு படம்அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான். இந்த இரு படங்களுமே ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 

Shahrukh khan

இந்த நிலையில் ஷாருக்கான் தில் சே படத்திற்குப் பிறகு தென்னிந்திய படத்தில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த அவர் தென்னிந்திய சினிமா குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Latest Videos


Shahrukh khan

மேலும் "இந்திய சினிமாவை பிராந்தியமாக்க வேண்டும் என்றால் அது மிகவும் தவறு. இந்தியா என்பது பரந்து விரிந்த நாடு. நாடு முழுவதும் வெவ்வேறு மொழிகள் உள்ளன.தமிழ் தெலுங்கு, இந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி எனப் பல மொழிகள் உள்ளன, பல மொழிகளிலும் மிகச்சிறந்த முறையில் கதை சொல்லும் திறமையாளர்கள் இருக்கின்றனர்.” என்று ஷாருக்கான் தெரிவித்தார்.

Shahrukh khan

தொடர்ந்து பேசிய அவர் "மலையாள சினிமா, தெலுங்கு சினிமா, தமிழ் சினிமா என பல மொழிகளில் நம் நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர், இந்தியாவில் நம் அனைவருக்கும் அது தெரியும். சமீபத்தில் ஜவான், ஆர்ஆர்ஆர், பாகுபலி உள்ளிட்ட சில பிரம்மாண்ட வெற்றிகளால், அனைவரும் அதை கவனிக்கத் தொடங்கினர். ஆனால். சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தென்னிந்திய சினிமா மிகவும் சிறப்பாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

Shahrukh khan

மணிரத்னத்தின் தில் சே படத்தில் பணிபுரிந்த பிறகு தென்னிந்திய சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் ஷாருக்கான் தெரிவித்தார். மேலும் "தில் சே படத்தில் மணிரத்னத்துடன் பணிபுரிந்த பிறகு தென்னிந்திய இயக்குனர் படத்தில் நடிக்க என்ற ஆசை இருந்தது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும்.

Shahrukh khan

ஆனால் தென்னிந்திய சினிமா என்பது கொஞ்சம் ஸ்பெஷல். அங்கு ஹீரோக்களை வாழ்க்கையை விட பெரிதாக கருதுகின்றனர். அதில் நிறைய இசை இருக்கும். அதனால் நான் மிகவும் ரசித்தேன், அது போன்ற ஒரு படத்தை நான் செய்ததில்லை” என்று தெரிவித்தார்.

Shahrukh khan

இயக்குனர் அட்லியை புகழ்ந்து பேசிய ஷாருக்கான் “  தென்னிந்திய இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கும் போது மொழி ஒரு பிரச்சனையாக இருக்கும். ஆனால் பின்னர் நாங்கள் சைகை செய்ய ஆரம்பித்தோம்.

Shahrukh khan

அட்லீ ஒரு சிறந்த நபர். நாங்கள் ஜவான் படப்பணிகளில் இருந்த போது, அவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அப்போது என் தந்தையின் பெயர் மீர் என்ற பெயரை வைத்துள்ளார், நாங்கள் படத்தின் பெரும்பகுதியில் ஒன்றாக டான்ஸ் ஆடி, இட்லி தோசை மற்றும் சில்லி சிக்கன் சாப்பிட்டு மகிழ்ந்தோம், ஜவான் இந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவின் முதல் இணைப்புகளில் ஒன்றாகும் எல்லாவிதமான எல்லைகளையும் தாண்டி, உண்மையிலேயே நல்ல வசூல் செய்து நாடு முழுவதும் மிகப்பெரிய ஹிட்டானது. 

click me!