புதுசா கட்டின வீடு மட்டும் 1.8 கோடி.. இப்போ நான் வாங்குற சம்பளம்.. மனம் திறந்த ஆல்யா மானசா - வெயிட்டு கை தான்!
Alya Manasa : சீரியல் உலகை பொறுத்தவரை இன்று டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆல்யா மானசா என்றால் அது மிகையல்ல.
Actress Alya Manasa
பண்பலை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகை ஆல்யா மானசா, கடந்த 2017ம் ஆண்டு வெளியான "ஜூலியூம் நான்கு பேரும்" என்கின்ற கோலிவுட் திரைப்படத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார்.
பஞ்சாயத்தில் உடையப் போகும் உண்மைகள்... வசமாக சிக்குவாரா செளந்தரபாண்டி? அண்ணா சீரியல் அப்டேட்
Serial Actress Alya
ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்ற பொழுதும், "ராஜா ராணி" மற்றும் "இனியா" போன்ற நாடகங்களில் நடித்து தான் ஆல்யா மானசா மிகப்பெரிய நடிகையாக மாறினார். இன்று சீரியல் துறையை பொறுத்தவரை அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் இவரும் ஒருவர்.
sanjeev
கடந்த 2022ம் ஆண்டு "இனியா" என்ற நாடகத்தில் இவர் நடித்து வந்த பொழுது, ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20,000 முதல் 25,000 வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் ஆல்யா மானசா. தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 50,000 முதல் 60,000 வரை அவர் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Alya Manasa Son
இது ஒரு புறம் இருக்க, சில மாதங்களுக்கு முன்பு தனது புதிய வீட்டில் அவர் குடியேறினார். அந்த வீடு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதை முழுக்க முழுக்க தான் லோனில் தான் கட்டியுள்ளதாகவும் அண்மையில் அவர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் ஆல்யா மானசா.
Bigg Boss Tamil : அடுத்த பிக்பாஸ் யார்? கமல் விலகலுக்கு பின் விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை