இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் மகாராஜா. எதார்த்தமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படம் அழுத்தமான மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தோடு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
24
vijay sethupathi 100 crore
இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின்னர், நடிகர் விஜய் சேதுபதிக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது. அதேபோல் இப்படம் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்க உள்ள இரண்டாவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தன்னுடைய முதல் படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நித்திலன், தன்னுடைய இரண்டாவது படத்தை நடிகை நயன்தாராவை வைத்து 'மகாராணி' என்கிற டைட்டிலில் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
44
Nayanthara Maharani Movie
மேலும் இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை வைத்து எடுக்கப்பட உள்ள, திரைப்படம் என்றும் இந்த படத்தை, 'மகாராஜா' படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் நயன்தாரா நடிக்க உள்ள இப்படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா மிகவும் எதிர்பார்த்த அவருடைய 75 வது படமான 'அன்னபூரணி' கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதைத்தொடர்ந்து இவர் கதையின் நாயகியாக நடிக்கும் இப்படம் ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.