ஸ்ரீதேவி :
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஹிந்தியில் அறிமுகமான அவர் பாலிவுட்டிலும் முன்னணி நாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி இருந்த அவர் இங்கலீஷ், விங்க்லீஷ் மூலம் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் 2018-ம் ஆண்டு துபாய் சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.