Tamil Patriotic Movies
இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதைப்போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினம் இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ் சினிமாவில் வெளிவந்த தேசபக்தியை உணர்த்தும் படங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Roja
ரோஜா
தேசப்பற்றையும், காதலையும் ஒருசேர காட்டிய திரைப்படம் ரோஜா. மணிரத்னம் இயக்கிய இந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் கடந்த 1992-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மதுபாலாவும் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Jaihind
பாம்பே
ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிரத்னமும், அரவிந்த்சாமியும் இணைந்து பணியாற்றிய படம் தான் பாம்பே. மனிதர்கள் எல்லாரும் சமமே, அவர்களை சாதி, மதம் என பிரிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் தேசப்பற்றை உணர்த்தும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். குறிப்பாக கலவரத்திற்கு பின் மக்கள் சாதி, மத பேதமின்றி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் கண்களை கலங்கச் செய்யும்.
Bombay
ஜெய்ஹிந்த்
சுதந்திர தினம் என்றாலே ஜெய்ஹிந்த் படம் தொலைக்காட்சிகளில் கண்டிப்பாக ஒளிபரப்பப்படும். அந்த அளவுக்கு தேசப்பற்றோரு ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கி, ஹீரோவாக நடித்த இப்படத்தில் ரஞ்சிதா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் சதித்திட்டம் தீட்டும் பயங்கர வாதிகளை போலீஸ் அதிகாரியான அர்ஜுன் எப்படி சமாளித்தார் என்பதை அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் படமாக்கி இருந்தனர். இப்படத்தையும் சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாம பாருங்க.
Siraichalai
சிறைச்சாலை
சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளைப் கண்முன் காட்டிய திரைப்படம் தான் சிறைச்சாலை. இப்படத்தில் மோகன்லால், பிரபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆயுள் தண்டனை கைதிகளாக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் சிறைச்சாலை படத்தின் கதை. சிறையில் ஆங்கிலேயர்கள் எந்த அளவு கொடுமைப்படுத்தினார்கள் என்பதை தோலுரித்து காட்டிய திரைப்படம் இது.
இதையும் படியுங்கள்... "ஏன் இப்படி தவறான தகவலை பரப்புறீங்க? ப்ளீஸ் வேண்டாம்.. இளையராஜா மருமகளின் திடீர் பதிவு - என்ன ஆச்சு?