நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தாவை விட இளையவர் சோபிதா.! அடேங்கப்பா இத்தனை வயசு வித்தியாசமா?

First Published | Aug 8, 2024, 12:28 PM IST

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ள நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இடையை எத்தனை வயசு வித்தியாசம் உள்ளது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
 

Naga Chaitanya Debut

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாக அர்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமி டகுபதிக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா. தன்னுடைய படிப்பை முடித்தவுடன், அப்பாவைப் போலவே ஒரு நடிகராக ஆசைப்பட்ட நாக சைதன்யா 'ஜோஸ்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான Ye Maaya Chesave என்கிற படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்தார்.
 

Naga Chaitanya And Samantha Movie

 இந்த திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்கிற பெயரில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

சுந்தரி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
 

Tap to resize

Naga Chaitanya Filmography

இதை தொடர்ந்து 100% லவ், தாஹா, மனம், பிரேமம், மகாநடி போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் 'தண்டால்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
 

Naga Chaitanya and samantha divorce

நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து கரம் பிடித்த நாக சைதன்யா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.  இந்த விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை, இருவருமே வெளிப்படையாக இதுவரை பேசாத நிலையில் அவ்வப்போது நாசுக்காக சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர். 

கொசுவலையில் தைத்த கிக்கான உடையில்... கடற்கரையில் பிக்பாஸ் ஜனனி எடுத்து கொண்ட மிடுக்கான போட்டோஸ் ஷூட்!
 

Naga Chaitanya-Sobhita Dhulipala dating

சமந்தாவை பிரிந்த பின்னர், கடந்த இரண்டு வருடங்களாக 'பொன்னியின் செல்வன்' பட நாயகி சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்த நாக சைத்தாயாவுக்கு இன்று நாகார்ஜுனாவின் வீட்டிலேயே எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Naga Chaitanya-Sobhita Dhulipala getting engaged

இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் தான் தற்போது டோலிவுட் திரையுலகையே மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, நாக சைதன்யா மற்றும் சோபிதா இடையே எவ்வளவு வயசு வித்தியாசம் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'கோட்' பட புரோமோஷன்...! இதை மட்டும் பண்ணவே கூடாது.. ரசிகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட தளபதி.!

Naga Chaitanya-Sobhita Dhulipala age difference

நாக சைதன்யா 1986-ம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிறந்தவர். சோபிதா 1992 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி பிறந்தவர். நாக சைதன்யாவுக்கு 37 வயது ஆகும் நிலையில், சோபிதாவுக்கு 32 வயது தான் ஆகிறது. இதன் மூலம் நாக சைதயாவை விட, சோபிதா 5 வயது இளையவர் என்பது தெரிகிறது. அதே போல் நாக சைத்தாயாவின் முன்னாள் மனைவியான சமந்தாவை விடவும், சோபிதா 4 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!