சஞ்சீவின் அக்கா.. இணைந்த கைகள் பட நடிகை சிந்துவை ஞாபகம் இருக்கா? 33 வயதிலேயே எப்படி இறந்தாங்க தெரியுமா?

First Published | Aug 8, 2024, 12:15 PM IST

இணைந்த கைகள் பட பிரபலமான நடிகை சிந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் அவர் தனது 33-வது வயதிலேயே எப்படி இறந்தார் என்று தெரியுமா?

sanjeev sister Sindhu

90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிந்து. ஹீரோயினாக அறிமுகமான இவர், ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகை, சீரியல் என படு பிசியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் தனது 33 வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் சிந்து. அவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

Actress Sindhu

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் 2-வது மனைவியும் நடிகையுமான மஞ்சுளாவின் சகோதரி மகள் தான் சிந்து. 1989-ம் ஆண்டு வெளியான பொன்மன செம்மல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து புலன் விசாரணை படத்தில் நடித்தார். இந்த 2 படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்து வந்த சிந்து, இணைந்த கைகள் படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். 

Tap to resize

Actress Sindhu

இந்த படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருப்பார் சிந்து. இணைந்த கைகள் படத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதை தொடர்ந்து பாட்டாளி மகன் என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார்.

Actress Sindhu

பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்து, பின்னர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். ஊர் மரியாதை, கோகுலம், சந்திரலேகா, கோபாலா கோபாலா, பரம்பரை, பிஸ்தா, சூரிய வம்சம், பூவேலி, என்றென்றும் காதல் என பல படங்களில் நடித்திருந்தார்.

Actress Sindhu

பெண், அண்ணாமலை, மெட்டி ஒலி என பல ஹிட் சீரியல்களிலும் சிந்து நடித்திருந்தார். 2000களின் தொடக்கத்திலும் பல படங்களில் நடித்து வந்தார் சிந்து. குறிப்பாக குங்கும பொட்டு கவுண்டர், அன்பே அன்பே, சொக்க தங்கம். கிரி, ஜனா ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் கடைசியாக சரத்குமாரின் ஐயா படத்தில் சிந்து நடித்திருந்தார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜின் மனைவியாக சிந்து நடித்திருப்பார். ஆனால் இந்த படம் தனக்கு கடைசி படமாக இருக்கும் என்று சிந்து நினைத்திருக்கமாட்டார். 

Actress Sindhu

ஆம். 2005-ம் ஆண்டு சுனாமி நிதி திரட்டுவதற்காக சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிந்து வெகு தூரம் நடந்து சென்ற போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Actress Sindhu

பிரபல கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரகுவீர் என்பவரை 1995-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிந்து இறக்கும் போது அவரின் மகள் ஸ்ரேயாவுக்கு 9 வயது தான். நடிகை சிந்துவின் தம்பி தான் பிரபல நடிகர் சஞ்சீவ் வெங்கட். மெட்டி ஒலி, திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான அவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தனது அக்கா சிந்து இறந்த நிலையில், அவரின் மகள் ஸ்ரேயா தந்தை ஸ்தானத்தில் இருந்து சஞ்சீவ் தான் வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் ஸ்ரேயாவுக்கும் அஸ்வின் ராம் என்ற இயக்குனருக்கும் சஞ்சீவ் திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!