சமந்தாவின் அக்காவை தான் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா நாக சைதன்யா? இதென்ன புது கதையா இருக்கு!

First Published | Aug 8, 2024, 12:11 PM IST

நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் தற்போது இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருகிறாராம்.

Naga Chaitanya

டோலிவுட் திரையுலகில் காதல் மன்னனாக வலம் வருகிறார் நாக சைதன்யா. முதலில் நடிகை சமந்தாவை காதலித்த அவர், அவரை திருமணமும் செய்துகொண்டார். கோவாவில் சமந்தா - நாக சைதன்யா ஜோடியின் திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் மூன்று ஆண்டுகள் குறையாத காதலுடன் வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இடையே, கொரோனா ஊரடங்கு சமயத்தில் மோதல் ஏற்பட்டது.

Samantha, Naga Chaitanya

நாக சைதன்யா உடனான மோதலுக்கு பின்னர் அவரது வீட்டை விட்டு வெளியேறிய சமந்தா, தனது பெற்றோருடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவர்களது விவாகரத்து செய்து அரசல் புரசலாக பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி சில மாதங்கள் மெளனம் காத்த சமந்தா, வேறுவழியின்றி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய விவாகரத்து முடிவை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார்.

இதையும் படியுங்கள்... 3 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் தந்தை... ராஜவாழ்க்கை வாழும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு இதோ

Tap to resize

Naga Chaitanya, Sobhita Dhulipala

சமந்தா - நாக சைதன்யா ஜோடியின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விவாகரத்துக்கு பின்னர் மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்ட சமந்தா, பின்னர் அதில் இருந்து மீண்டு தற்போது சினிமாவில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். மறுபுறம் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா, அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகி இருக்கிறார். அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளப்போவது சமந்தாவின் அக்காவை தானாம்.

sobhita Dhulipala sister samantha

இதைக் கேட்கும்போதே ஷாக் ஆக இருக்கிறது. ஆனால் அது நடிகை சமந்தாவின் அக்கா இல்லை. நாக சைதன்யாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளது நடிகை சோபிதா துலிபாலா என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தான் சமந்தாவின் அக்காவாம். நடிகை சோபிதாவுக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவர்பெயரும் சமந்தா தான். அதை வைத்து தான் சமந்தாவின் அக்காவை நாக சைதன்யா திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்... அவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்படப்போற நடிகை யார் தெரியுமா?

Latest Videos

click me!