2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விறுவிறுப்பான கதைகளத்தில் எமோஷன், துரோகம், பழிவாங்குதல், என யூகிக்க முடியாத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் இந்த தொடரில் நீலிமா ராணி மற்றும் அருண்குமார் ராஜன் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் இணைந்த பின்னர் புதிய கோணத்தில் சீரியல் நகர்ந்து வருகிறது.