1990களில் விஜய், அஜித்துக்கு நிகராக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டவர் தான் பிரசாந்த். நடிகரும், இயக்குனருமான தியாகராஜனின் மகனான இவர், 17 வயதிலேயே ஹீரோவாகிவிட்டார். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமான பிரசாந்துக்கு முதல் படமே ஹிட்டானதை தொடர்ந்து பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி, மணிரத்னத்தின் திருடா திருடா என அடுத்தடுத்து பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஹிட் அடித்தன.