கேஜிஎப் படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்தவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கிய அப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. கேஜிஎப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் செய்தனர். முதல் பாகத்தை காட்டிலும் செம்ம மாஸாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ,1200 கோடி வசூலித்தது.