நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்... அவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்படப்போற நடிகை யார் தெரியுமா?

First Published | Aug 8, 2024, 7:36 AM IST

சமந்தாவின் மாஜி கணவரான நாக சைதன்யாவுக்கு விரைவில் இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இன்று அதற்கான நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

Naga Chaitanya

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவரின் மகன் நாக சைதன்யா, அகில் ஆகியோரும் தற்போது டோலிவுட்டில் இளம் நாயகர்களாக கலக்கி வருகிறார்கள். அதில் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா, தன் தந்தையை போலவே ஒரு பிளே பாய் ஆக வலம் வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து கரம்பிடித்தார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

Samantha, Naga Chaitanya

சமந்தாவுக்கு, நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் நடிகை சோபிதா துலிபாலா மீது நடிகர் நாக சைதன்யா காதல் வயப்பட்டார். இருவரும் ஒன்றாக வெளிநாட்டில் டேட்டிங் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி அவர்களின் காதல் விவகாரமும் காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் இருவரும் அதுபற்றி வாய் திறந்ததே இல்லை.

இதையும் படியுங்கள்... இந்த டோலிவுட் குயின்களின் வாழ்க்கையில் ஒரே சோகம் தான்.. என்னாச்சு தெரியுமா?

Tap to resize

Naga Chaitanya-Sobhita Dhulipala

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்துள்ளதாம். அதன்படி சோபிதா துலிபாலா, நாக சைதன்யா ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் நாக சைதன்யாவின் இல்லத்தில் வைத்து தான் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Naga Chaitanya and Sobhita Dhulipala Engagement today?

இந்த நிகழ்வில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் தான் தற்போது டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் நாக சைதன்யாவுக்கு இது இரண்டாம் திருமணமாக இருந்தாலும், சோபிதாவுக்கு இதுவே முதல் திருமணம். நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவும் முதல் மனைவி லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது அதே ரூட்டை நாக சைதன்யாவும் பாலோ செய்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஹீரோவுடன் லிப் லாக்... சிம்ரனின் காதல் தோல்விக்கு அந்த ஹீரோ தான் காரணமா?

Latest Videos

click me!