கமல் இல்ல.. கல்கி 2898 AD படத்தில் சுப்ரீம் யாஸ்கினாக முதலில் நடிக்க இருந்தது இந்த உச்ச நடிகர் தானாம்..

First Published | Aug 8, 2024, 10:33 AM IST

கமல்ஹாசன் முதலில் கல்கி 2898 படத்தை நிராகரித்த நிலையில், அவருக்கு பதில் இந்த உச்ச நடிகரை சுப்ரீம் யாஸ்கினாக நடிகக் வைக்க இயக்குனர் நாக் அஸ்வின் முடிவு செய்தாராம்.

Kalki 2898 AD

கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியான கல்கி 2898 படத்தின் வசூல் வேட்டை இன்னும் முடியவில்லை.. படம் வெளியாகி ஒரு மாதமாகியும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படம் அதிக வசூல் செய்த இந்திய படமாக மாறி உள்ளது. 

Kalki 2898 AD

மகாபாரதப் போருக்கு 6000 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் நடக்கும் இந்த கதையில், பிரபாஸ் பைரவா என்ற ரோலிலும்,  தீபிகா படுகோன், SUM-80 என அழைக்கப்படும் சுமதி என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.அமிதாப் பச்சன் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமாவாகவும், கமல்ஹாசன் யாஸ்கின் என்ற சுப்ரீம் லீடராகவும் நடித்துள்ளார்.

Tap to resize

Kalki 2898 AD

கல்கி 2898 ஏடி படத்தில் சுப்ரீம் லீடர் யாஸ்கின் என்ற நெகட்டிவ் ரோலில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தின் கமலின் நடிப்பும் தோற்றமும் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. படத்தில் ஓரிரு காட்சிகளே வந்தாலும் கமலின் கேரக்டர் சக்திவாய்ந்த கேரக்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் திரையில் தோன்றும் நேரம் குறைவாக இருந்தாலும் அடுத்த பாகத்தில் கமல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kalki 2898 AD

தனது அசாத்திய நடிப்பால் சுப்ரீம் லீடர் யாஸ்கின் கேரக்டர் மூலம் ரசிகர்களை மிரள வைத்தார் கமல்ஹாசன். இருப்பினும், கமல்ஹாசன் முதலில் படத்தை நிராகரித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மை தான். இந்த படத்திற்காக நாக் அஸ்வின் முதலில் கமல்ஹாசனை தொடர்பு கொண்ட போது தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், கல்கி 2898 கிபிக்கு தேதிகளை ஒதுக்க முடியாது என்றும் கமல் கூறிவிட்டாராம். 

actor mohanlal

கமல் நிராகரித்த உடன், சுப்ரீம் யாஸ்கின் வேடத்திற்கு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமல்ல, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தான். எனவே மோகன்லாலை நடிக்க வைக்க நாக் அஸ்வின் முடிவு செய்துள்ளார்..

Kalki 2898 AD

நாக் அஸ்வின் திரைக்கதையுடன் மோகன்லாலை அணுகுவதற்கு முந்தைய நாள், கமல்ஹாசன் அவரைத் திரும்ப அழைத்து, படத்தில் தனக்கு அதிக காட்சிகள் இல்லாததால் படத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறிஉள்ளார். அதன்படி. இந்த படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

nag ashwin

கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த படத்தின் பணிகளை முன்கூட்டியே முடிக்க உள்ளதாக நாக் அஸ்வின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!