3 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் தந்தை... ராஜவாழ்க்கை வாழும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு இதோ

Published : Aug 08, 2024, 11:25 AM IST

தெலுங்கு திரையுலகில் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வரும் நடிகர் நாக சைதன்யாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

PREV
18
3 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் தந்தை... ராஜவாழ்க்கை வாழும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு இதோ
Naga Chaitanya

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவுக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவி லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்ட நாகார்ஜுனா, தற்போது அவருடன் தான் வாழ்ந்து வருகிறார். நாகார்ஜுனாவுக்கு நாக சைதன்யா, நிகில் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான நாக சைதன்யா, நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர் ஆவார். நிகில் அமலாவின் மகன் ஆவார்.

28
Naga Chaitanya, Nagarjuna

நாகார்ஜுனாவை போல் அவரது மகன்களும் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகின்றனர். நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த ஜோஷ் படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்த நாக சைதன்யாவுக்கு அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

38
Samantha, Naga Chaitanya

அப்படத்தின் மூலம் தான் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மனம் படம் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினார். இந்த காதல் ஜோடி கடந்த 2017-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தது. இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது.

48
Naga Chaitanya, Samantha Divorce

திருமணத்துக்கு பின்னர் சமந்தா, நாக சைதன்யா இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வந்தனர். ஜாலியாக சென்று கொண்டிருந்த இந்த காதல் ஜோடியின் திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... மீண்டும் கேங்ஸ்டராக களமிறங்கும் கேஜிஎப் நாயகன்... புது லுக்குடன் டாக்ஸிக் படத்துக்கு பூஜை போட்ட யாஷ்

58
Naga Chaitanya Salary

சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் பாலிவுட்டில் அறிமுகமான நாக சைதன்யா, அங்கு அமீர்கான் உடன் இணைந்து லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடித்தார். கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் மீண்டும் டோலிவுட் பக்கம் திரும்பிய அவர் தற்போது தண்டல் படத்தில் நடித்து வருகிறார்.

68
Naga Chaitanya Net Worth

லால் சிங் சத்தா படம் மூலம் பான் இந்தியா நடிகராக உருவெடுத்த நாக சைதன்யா, தன் சம்பளத்தை அதற்கு ஏற்றார் போல் உயர்த்தி இருக்கிறார். அப்படத்திற்கு முன்னர் வரை ரூ.5 கோடி வாங்கிய அவர், அப்படத்திற்கு பின் தன் சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

78
Sobhita Dhulipala, Naga Chaitanya

சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக நடைபெற உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

88
Naga Chaitanya Car Collection

இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். அவரின் தந்தை ரூ.3 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பதால் சிறுவயதில் இருந்தே ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த நாக சைதன்யா, தற்போது ரூ.154 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்ட இவர், அண்மையில் ரூ.3.5 கோடி மதிப்பு போர்ஸே 911 ஜிடி3 காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சுந்தரி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Read more Photos on
click me!

Recommended Stories