மலையாள திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு வாரியர், திருமணமாகி தன்னுடைய காதல் கணவரும், நடிகருமான திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், சினிமாவில் அதிக ஆர்வம் காட்ட துவங்கினார்.
இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மஞ்சு வாரியர், இதில் பச்சையம்மாவாக கிராமத்து வேடத்தை ஏற்று நடித்தார். இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த இவருக்கு வாய்ப்புகளும் வருவதாக கூறப்படும் நிலையில், 'துணிவு 'திரைப்படத்தில் நடிக்க மஞ்சுவாரியர் எவ்வளவு சம்பளம் வாங்கினார்? என்பது குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது.