சமீப காலமாகவே, நடிகைகள் தங்களுக்கு இருக்கும் அரிய வகை நோய்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து.. வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் என்கிற தசை அழற்சி நோயால், பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இவரை தொடர்ந்து அடுத்தடுத்து பல நடிகைகள் தங்களின் பிரச்சனை குறித்து பேசியதை பார்க்க முடிந்தது.
இவரைத் தொடர்ந்து கோ, சட்டம் ஒரு இருட்டறை, நெருங்கி வா முத்தமிடாதே, போன்ற படங்களில் நடித்த பியா பாஜ்பாய் தானும் மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, காலில் வீக்கம் மற்றும் உடல் வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இப்படி தொடர்ந்து நடிகைகள் தங்களுக்குள்ள பிரச்சினைகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக, சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமாகி... ஒரு சில வருடங்களிலேயே திருமணம் ஆகி செட்டிலான வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கம் பேக் கொடுத்து, அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாக பார்க்கப்படும் வனிதா, கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3 ஆவது திருமணம் செய்து பீதியை கிளப்பியவர். ஆனால் அந்த உறவு ஓரிரு மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அவரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால், கடந்த வாரம் உயிரிழந்தார். இதை தொடர்ந்து செய்திகளில், வனிதாவின் மூன்றாவது கணவர் என்றும் வனிதாவின் முன்னாள் கணவர் என்றும் கூறி வந்ததால்... தன்னுடைய தரப்பில் இருந்து இவர் கொடுத்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
The Kerala Story Review: கேரளா ஸ்டோரி மதவெறியை தூண்டும் சர்ச்சை படமா? ட்விட்டர் விமர்சனம்!
நானும் பீட்டர் பாலும் உறவில் மட்டுமே இருந்தோம். சட்டப்படி அவர் எனக்கு கணவரும் கிடையாது. நான் அவருக்கு மனைவியும் கிடையாது. என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்கும் வழக்கம் போல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது என்பது அனைவரும் அறிந்ததே...