நடிகை திரிஷா இன்று தனது 40-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். நடிகை திரிஷாவுக்கு ஸ்பெஷலான பிறந்தநாளாகவும் இது அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அடுத்தடுத்து பிரம்மாண்ட ஹிட் படங்களை கொடுத்த குஷியில் இந்த பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் திரிஷா. அதுமட்டுமின்றி நடிகை திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் நடிகை திரிஷா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இப்படம் மூலம் நடிகர் விஜய்யும் திரிஷாவும் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதையும் படியுங்கள்... திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!
இந்நிலையில், இன்று 40-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை திரிஷாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. மறுபக்கம் அவர் நடிக்கும் படக்குழுவும் சில அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் லியோ படக்குழுவும் நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வேறலெவல் அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.