சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய கணவர் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், முழு வீச்சில் திரைப்படங்கள் இயக்குவதிலும், தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
25
Lal Salaam
அந்த வகையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், ஹீரோவாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். அதேபோல் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில்... விரைவில் இரண்டாம் கட்ட படபிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
45
இந்நிலையில் அடுத்ததாக பட குழுவினர் எங்கு செல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஹீரோவான விஷ்ணு விஷால் 'லால் சலாம்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலுடன் அவர் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் மும்முரமாக நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர்... 'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.