நயன்தாரா பிரபு தேவா உடனான காதல் தோல்வியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்த நிலையில், நயனை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கி, ஒரே படத்தில் நயன்தாராவை காதல் வலையில் வீழ்த்தினார் விக்னேஷ் சிவன். சுமார் 6 வருடங்கள் காதலித்து வந்த இந்த ஜோடி... கடந்த ஆண்டு, ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டது மட்டும் இன்றி, திருமணமான 4 மாதத்தில்... வாடகை தாய் மூலம் குழந்தையையும் பெற்றெடுத்தனர்.