Director Shankar 61st Birthday
இன்று தன்னுடைய 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இயக்குனர் ஷங்கர், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் பிறந்ததால் என்னவோ... சிறுவயதில் இருந்தே சினிமா ஆசை இவரை பற்றிக்கொண்டது. தன்னுடைய பெற்றோர் ஆசைப்படி டிப்ளமோ படிப்பை முடித்த ஷங்கர், பின்னர் தன்னுடைய விருப்பத்தின் படி.. தளபதி விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் துணை இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.
Shankar Working Assistant Director for SAC
துணை இயக்குனராக பணியாற்றும் போதே ஏதாவது கேரக்டருக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், இவர் தான் அந்த கதாபாத்திரமாக மாறி நடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அப்படி தான் விசேஷம், பொன்னும் புள்ளையும், வசந்த ராகம், நீதிக்கு தண்டனை, சீதா, போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தலைகாட்டினார்.
'GOAT' ட்ரைலரில் இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?
Shankar Debut Director in Gentleman
இதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு, நடிகர் அர்ஜூன் - மதுபாலாவை வைத்து 'ஜென்டில்மேன்' திரைப்படத்தை இயக்கி தரமான ஹிட் கொடுத்தார். இயக்குனராக அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மட்டும் இன்றி 'ஜென்டில்மேன்' திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. அதே போல், இப்படம் நடிகர் அர்ஜுனுக்கு தமிழ் திரை உலகில் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரபுதேவா மற்றும் நக்மா நடித்த 'காதலன்' படத்தை இயக்கினார். இந்த படத்தை 'ஜென்டில்மேன்' படத்தை தயாரித்த கே டி குஞ்சுமோன் தான் தயாரித்திருந்தார். இந்த படம் இளவட்ட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அதே நேரம் அனைவரும் பார்க்கும் படியான ஜனரஞ்சகமான படமாகவும் அமைந்தது.
Shankar Successful Movies
இதன் பின்னர் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே, உலக நாயகன் கமலஹாசனை வைத்து 'இந்தியன்' படத்தை இயக்கினார். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், கமலஹாசன் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஊழலுக்கு எதிரான சமூக கருத்துடன் வெளியான இப்படம், கமலஹாசன் திரையுலக வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றாக மாறியது. இந்த படத்தின் வெற்றியே தொடர்ந்தே... இந்த ஆண்டு வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்தியன் 2 படு தோல்வியை சந்தித்த நிலையில் 'இந்தியன் 3' ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா? என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவி 'மகாநதி' சீரியல் ஹீரோ ருத்ரன் பிரவீனுக்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!
Big Budget Director is Shankar
ஒவ்வொரு படத்தின் வெற்றியை தொடர்ந்தும், அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்ற இயக்குனர் ஷங்கர் தன்னுடைய கதையிலும், கதாபாத்திரங்களிலும் கூட பிரம்மாண்டத்தை கொண்டு வர துவங்கினார். அதற்கு ஏற்ற போல், ஒரு பக்கம் இவர் இயக்கும் படங்களின் பட்ஜெட் அதிகரித்து கொண்டே செல்ல... தன்னுடைய சம்பளத்தையும் பல கோடிகளில் கேட்க துவங்கினார்.
Director Shankar Upcoming Movie Game Changer
ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்களுக்காக இவர் கோடிகளில் மட்டுமே சம்பளமாக பெற்றார். அதே போல் எந்திரன், 2.0, இந்தியன் 2, போன்ற படங்களில் பல வெளிநாட்டு தொழில் நுட்பங்களுடன் இப்படங்கள் உருவாக்கினார். தற்போது கேம் சேஞ்சர் படத்தை, நடிகர் ராம் சரணை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை கருவை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து ஷங்கர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்கள்!
Shankar Produced good Subject movies
வெற்றிகரமான இயக்குனராக மட்டுமின்றி, சிறந்த தயாரிப்பாளராகவும் அறியப்பட்டவர் ஷங்கர். இவர் தயாரித்த முதல்வன், காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெய்யில், கல்லூரி, அரை எண் 305-ல் கடவுள், ஈரம், ரெட்ட சுழி, ஆனந்தபுரத்து வீடு, அநீதி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான படங்களாகவே பார்க்க பட்டன.
Director Shankar Net Worth
இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களின் ஒருவராக இருக்கும் ஷங்கர், கேம் சேஞ்சர் படத்திற்காக மட்டும் சுமார் 50 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து இவருடைய மகள் அதிதி ஷங்கரும் தற்போது திரை உலகில் ஒரு நடிகையாக கவனம் செலுத்தி வருகிறார். இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கரின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கோடியில் சம்பளம் என்ன பிரோஜயனம்? நிறைவேறாத கனவுடன் நடிகராக மாறிய ஆர்யா!
Shankar Property Details
அதன்படி இவருடைய சொத்து மதிப்பு சுமார் 150 கோடிக்கு முதல் 200 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஷங்கருக்கு சொந்தமாக சென்னையில் சில வீடுகள் உள்ளது. குறிப்பாக இவர் வாழ்ந்து வரும் வீடு, சுமார் 6 கோடி முதல் 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதைத் தவிர ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ள இயக்குனர் ஷங்கர், ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட், BMW, ஆடி, போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார். ஒரு சில நிறுவனங்களிலும் பங்குதாரராக உள்ளார் என கூறப்படுகிறது.