'GOAT' ட்ரைலரில் இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

First Published | Aug 17, 2024, 6:13 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த ட்ரைலரில் கணிக்கப்பட வேண்டிய சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.
 

Vijay 68th Film is Goat

தளபதி விஜய் தன்னுடைய 68-ஆவது படமாக, 'கோட்' படத்தில் நடித்துள்ளார். விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின், ட்ரைலர் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரைலரில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம். 

The Greatest all time Movie Trailer

'கோட்' படத்தின், ட்ரெய்லரில் ஆரம்பத்திலேயே தேசியக் கொடியுடன் கூடிய கார்கள் அணிவகுப்பை காண முடிகிறது. இதன் மூலம் நாட்டின் மீது உள்ள நாட்டு பற்றை ட்ரைலரில் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் தளபதி விஜய். இதன் பின்னர் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தில் குருக்கள் வரார் வழி விடுங்கோ... என்கிற டயலாக்கை கொஞ்சம் மாற்றி 'அண்ணன் வரார் வழி விடுங்கோ' என வெங்கட் பிரபு, தளபதி ஃபேன்ஸ்க்கு ஏற்ற மாதிரியான ஒரு டயலாக்கை நச் என வைத்துள்ளார்.

விஜய் டிவி 'மகாநதி' சீரியல் ஹீரோ ருத்ரன் பிரவீனுக்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!

Tap to resize

Goat Movie Cast

அதே போல் நடிகர் பிரஷாந்த் இந்த படத்தில் கிட்டத்தட்ட விஜய்க்கு நிகரான... மேல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது, "உங்களை லீட் செய்ய போவது ஒரு லீடர் என அறிமுகம் செய்வதில்" இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. விஜய் பற்றி பிரஷாந்த் சொல்லும் போது, 68 வது இன்டர்நேஷனல் சக்சஸ்ஃபுல் ஆபரேஷன், நெகோஷியேட்டர்,  ஃபீல் ஏஜென்ட், ஸ்பை என கூறுவதால் விஜய் ஒரு சீக்ரெட் ஏஜென்ட் ரோலில் நடித்துள்ளது தெரிகிறது.

Vijay Full Action Packed Movie

அதேபோல் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு டாக்டராக நடித்துள்ளார். நடிகை சினேகாவின் முகம் கூடுதல் முதிர்ச்சியுடன் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். விஜய் 'காந்தி' என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். தளபதி இப்படத்தில் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளின் நடித்திருந்தாலும், ஃபிளாஷ் பேக் காட்சியில் நண்பர்களுடன் குடித்து கூத்தடிப்பது, பெண்களுக்கு ரூட் விடுவது என வழக்கமான சேட்டைகளையும் செய்துள்ளார்.

ஒரே நாளில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்கள்!

Vijay Young look Character

அதேபோல் நடிகர் மோகனின் ஆக்ரோஷமான முகத்தையும் ட்ரைலரிலேயே ரிவீல் செய்துள்ளார் வெங்கட் பிரபு. "தான் அனுபவித்த இந்த வலியை காந்தியும் அனுபவிக்க வேண்டும்" என பழிவாங்க துடிக்கும் மோகன் பல வருடங்களுக்கு பின்னர், அப்பா - மகன் என இருவரையும் தேடி வருவதே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. தளபதியின் டீன் ஏஜ் தோற்றம் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு, இளம் வயது தோற்றம் கவரவில்லை. அப்பா - மகன் போடும் பைட் தெறிக்கவிடுகிறது. 

Vijay Gilli Movie Scene:

"எவ்வளவு வயதானால் என்ன லயன் இஸ் ஆல்வேஸ் லயன்" என ஒய்.ஜி.மஹேந்திரன் பேசும் வசனம் ஹை லைட். அதை விட... கில்லி பட பாணியில் விஜய் காதில் பூவுடன், மருதமலை மாமணியே பாடலை பாடி கொண்டு பக்திமான் கெட்டப்பில் தோன்றுவது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

மணிரத்னத்துக்கு பிளாப் கொடுத்த "ஃபார்முலா" வெங்கட் பிரபுவுக்கு வெற்றி தருமா? GOAT ட்ரைலர் சொல்லும் கதை என்ன?

Latest Videos

click me!