விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'மகாநதி'. இந்த தொடரை ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய பிரவீன் பெனன்ட் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சுஜாதா சிவக்குமார், லட்சுமி பிரியா, சாமிநாதன், அனந்தராமன், ருத்ரன் பிரவீன், தாரணி, குமருதீன், பேபி காவியா, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகர் சரவணன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.