சினிமா மட்டுமல்ல.. பிசினஸிலும் கோடிகளில் சம்பாதிக்கும் தென்னிந்திய நடிகர் நடிகைகள்!

First Published | Aug 17, 2024, 3:05 PM IST

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் சிலர் தங்கள் தொழில் மூலம் கோடிகளில் லாபம் ஈட்டி வருகின்றனர். அல்லு அர்ஜுன், சமந்தா, விஜய், நயன்தாரா, ராம் சரண், ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா போன்றோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

South stars

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிலர் தங்கள் பிசினஸிலும் கொடி கட்டி பறந்து வருகின்றனர். தங்கள் தொழில் மூலம் இந்த பிரபலங்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் தங்கள் பிசினஸில் கோடிகளில் லாபம் ஈட்டி வரும் தென்னிந்திய பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Allu Arjun

அல்லு அர்ஜுன் 

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவரின் நடிப்பில் தற்போது புஷ்பா 2 படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் பிரபல M Kitchen, சர்வதேச விருந்தோம்பல் பிராண்ட் மற்றும் அவரது நண்பர் கேதர் செலகம்செட்டி ஆகியோருடன் இணைந்து ஹைலைஃப் ப்ரூயிங் (Hylife brewing company) என்ற நிறுவனத்தை ஹைதராபாத்தில் 2016 இல் தொடங்கினார். மேலும் பிரபலமான அமெரிக்க ஸ்போர்ட்ஸ் பார் பஃபலோ வைல்ட் விங்ஸின் உரிமையை வைத்திருக்கிறார்.

Tap to resize

Samantha

சமந்தா ரூத் பிரபு

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். Nourish You என்ற பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், பானங்கள் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஈ-காமர்ஸ் தளமான SustainKart போன்ற பிராண்டுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகிறார். மிஸ் இந்தியா 2016 ரன்னர்-அப் சுஸ்ருதி கிருஷ்ணாவுடன் இணைந்து Saakiஎன்ற ஃபேஷன் லேபிளை சமந்தா உருவாக்கி உள்ளார்.  பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகளின் பரந்த தேர்வைக் கொண்ட "நவீன இந்திய பிராண்ட்" என்று சாகி கருதப்படுகிறது.

Thalapathy vijay

தளபதி விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். விஜய்யின் கோட் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் என்பதை தாண்டி விஜய் ஒரு வெற்றிகரமான தொழிலதிபரும் கூட. விஜய்க்கு சொந்தமாக சென்னையில் பல திருமண மண்டபங்ள் உள்ளன. இந்த மண்டபங்களுக்கு  ஷோபா (அவரது தாய்), சங்கீதா (அவரது மனைவி) மற்றும் சஞ்சய் (அவரது மகன்) போன்ற அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் செயல்பட்டு வருகிறது..

Nayanthara

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பிசியான நடிகையாக வலம் வருகிறார். மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். நடிகை என்பதை தாண்டி வளர்ந்து வரும் தொழில்முனைவோராகவும் அவர் இருக்கிறார். நயன்தாரா கடந்த ஆண்டு 9 ஸ்கின் என்ற ஸ்கின் கேர் பிராண்டை அறிமுகப்படுத்தினார். லிப் பாம் பிராண்டான தி லிப் பாம் நிறுவனத்திலும் நடிகை முதலீடு செய்துள்ளார்.

Ram Charan

ராம் சரண் :

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் தெலுங்கி முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் விமானம் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு வணிகங்களில் இறங்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை தளமாகக் கொண்ட பிராந்திய விமான சேவையான Trujet என்ற சேவையை நடத்தி வருகிறார். இது ஹைதராபாத்தில் 2015 இல் செயல்படத் தொடங்கியது. நடிகர் ஹைதராபாத் போலோ மற்றும் ரைடிங் கிளப் என்ற போலோ அணியையும் வைத்திருக்கிறார்.

Rashmika Mandanna

ராஷ்மிகா மந்தனா 

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா வெற்றிகமான தொழிலதிபராக வலம் வருகிறார். 2022 ஆம் ஆண்டில், சைவ  பிளமின் என்ற ஸ்கின் கேர் பிராண்டில் ராஷ்மிகா முதலீடு செய்கிறார். அந்நிறுவனத்தின் பிராண்ட் தூதராகவும் அவர் இருக்கிறார்..

Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவும் ஒரு தொழிலதிபராகவும் இருக்கிறார். RWDY எனப்படும் தனது ஃபேஷன் நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். ஹைராபாத்தைச் சேர்ந்த ஆண்கள் கைப்பந்து அணியான ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸின் இணை உரிமையாளராகவும் அவர் இருக்கிறார். 

Latest Videos

click me!