
சினிமாவைப் பொறுத்தவரையில் முதலில் ஒரு ஹீரோவையோ, ஹீரோயினையோ மனதில் வைத்து கதை எழுதப்படுகிறது. அப்படியில்லை என்றால் முதலில் கதையை எழுதிய பிறகு ஹீரோக்களிடம் கதை சொல்லி ஒப்பந்தம் செய்கிறார்கள். அதன் பிறகு பட்ஜெட் பற்றி தீர்மானிக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடம் பேசப்படுகிறது.
அதன் பிறகு பட்ஜெட் முடிவு செய்யப்பட்டு படம் உருவாக்கப்படுகிறது. இதில், சில படங்களுக்கு ஹீரோக்களை வைத்து பட்ஜெட் முடிவு செய்யப்படுகிறது. இன்னும் சில படங்கள் தயாரிப்பாளர்களை வைத்து பட்ஜெட் தீர்மானிக்கப்படுகிறது. கடைசியாக சில படங்கள் திரைக்கதையை வைத்து முடிவு செய்யப்படுகிறது. அப்படி கோடி கோடியாய் கொடுத்து எடுக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் படங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…
2.0
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான படம் தான் 2.0. ரோபோ மற்றும் தொழில்நுட்ப கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.575 கோடி ஆகும்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், த்ரிஷா, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான லியோ படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி ஆகும். போதைப் பொருள் கதையை மையப்படுத்தி உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தியன் 2:
ஊழலுக்கு எதிராக போராடும் கதையை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் உருவாக்கியுள்ளார். கமல் ஹாசன், பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோ பலர் நடித்திருந்தனர். எதிர்மறையான விமர்சனத்தை பெற்ற இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி ஆகும்.
பொன்னியின் செல்வன் பார்ட் 2
வரலாற்று கதையை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருந்தார். விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். ரசிகளிடையே ஏக போக வரவேற்பு பெற்ற இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி.
பொன்னியின் செல்வன் பார்ட் 1
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் பார்ட் 1. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும், திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணியாகவும் நடித்திருந்த இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகளிடையே ஏக போக வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி. ஆனால், இந்தப்படம் ரூ.500 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி இருந்தார்.
நேற்று அறிவிக்கப்பட்ட 70ஆவது தேசிய திரைப்பட விருதில் பொன்னியின் செல்வன் 4 விருதுகளை வென்றது.
சிறந்த படம் – பொன்னியின் செல்வன் – பார்ட் 1
சிறந்த இசையமைப்பாளர் – ஏ ஆர் ரஹ்மான்
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்
சிறந்த சவுண்ட் – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
ஜெயிலர்
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், ஷிவராஜ் குமார் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த ஜெயிலர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.240 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.600 கோடி வரையில் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.
வாரிசு
இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சங்கீதா, கணேஷ் வெங்கட்ராம், ஷாம், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் வாரிசு. ரூ.225 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
தர்பார்
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் தர்பார். போலீஸ் மற்றும் போதைப் பொருள் கதையை மையப்படுத்தி ரூ.215 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது.
பிகில்
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஆனந்தராஜ், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் பிகில். கால்பந்து கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.185 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.300 கோடி வரையில் வசூல் எடுத்துள்ளது.
அண்ணாத்த
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, நயன்தாரா, மீனா, லிவிங்ஸ்டன், சூரி, பாண்டியராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் அண்ணாத்த. அண்ணன் – தங்கை கதையை மையப்படுத்தி ரூ.185 கோடி பட்ஜெட்டில் உருவான அண்ணாத்த ரூ.240 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.