அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன்2 பெரிதாக சோபிக்கவில்லை எனக்கூறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் டாப் கலெக்ஷனில் அந்தப் படமும் ஒன்றாக உள்ளது. மற்ற படங்கள் என்ன கலெக்ஷன் என்பதை இப்போது பார்க்கலாம்.
2024ம் ஆண்டு பிறந்து 7 மாதங்கள் கடந்த 8வது மாதம் நடந்து வருகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் சிறுபட்ஜெட் படங்கள் வெளியாக்கொண்டே இருக்கின்றன. விஷேச நாட்களில் பெரிய அளவிலான தயாரிப்பு படங்கள், முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவருகிறது.
இந்த 2024ம் ஆண்டு மட்டும் சுமார் 138 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கிய நடிகர்களின் படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் என 31 படங்கள் அடங்கும்.
26
Tamil Cinema
இந்த 2024ம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் இந்தியன் 2, சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர், கமல்ஹாசன் கூட்டணி இணைந்து கொடுத்த படம். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை. ஆனால், வெளியான நான்கே நாட்களில் கோடிகளை அள்ளிக்குவித்து டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
36
100 கோடி வசூல் தாண்டிய படங்கள்
2024ல் மட்டும் 5 படங்கள் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. சுந்தர் சி-யின் அரண்மனை 4 ரூ.100.50 கோடி
வசூலித்து 5வது இடத்திலும், தனுஷின் கேப்டன் மில்லர் ரூ.104.79 கோடி வசூலித்து 4வது இடத்திலும்,
46
2024ல் மட்டும் 5 படங்கள் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. சுந்தர் சி-யின் அரண்மனை 4 ரூ.100.50 கோடி
வசூலித்து 5வது இடத்திலும், தனுஷின் கேப்டன் மில்லர் ரூ.104.79 கோடி வசூலித்து 4வது இடத்திலும்,
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ரூ.107 கோடி வசூலித்து 3வது இடத்திலும், கமல்ஹாசனின் இந்தியன் -2 ரூ.148.81 கோடி வசூலித்து 2வது இடத்திலும், தனுஷின் 50வது படதான ராயன் ரூ.153 கோடிகளுடன் முதலிடத்தை பிடித்து, தொடர்ந்து வசூலிட்டி வருகிறது.
ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்பட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் ரூ.100 கோடி பாக்ஸ்ஆபிஸ் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.