சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான 'தங்கலான்' மற்றும் 'டிமான்டி காலனி 2' படங்கள் இரண்டிற்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதைத் தொடர்ந்து, இந்த இரு படங்களும், இரண்டாவது நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் மூன்று முத்தான படங்கள் வெளியாகின. அதன்படி பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தங்கலான்', இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள 'டிமான்டி காலனி 2' மற்றும் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள 'ரகு தாத்தா' ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன.
25
Thangalaan and Demonte Colony 2
மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூல் ரீதியாக 'தங்கலான்' மற்றும் 'டிமான்டி காலனி 2' ஆகிய இரண்டு படங்களுக்கு இடையே மிகுந்த போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள 'தங்கலான்', திரைப்படம் 26.44 கோடி உலக அளவில் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடிக்க, மாளவிகா மோகன் சூனியக்காரி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார்.
விறுவிறுப்பான ஆக்ஷன் கதைகளத்தோடு உருவாக்கிய இந்த திரைப்படம், தங்கம் எடுக்க பிரிட்டிஷ்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களின் போராட்டத்தையும், அவர்களின் உரிமை பறிக்கப்பட்டது பற்றியும் பேசி இருந்தது. இந்த படத்திற்கு நடிகர் விக்ரம் போட்ட உழைப்புக்கு படத்தின் வசூல் குறைவு என்றே விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியானது, அதன்படி இப்படம் இரண்டாவது நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
45
Demonte Colony Day 2 Collection
இதைத்தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள 'டிமான்டி காலனி 2' திரைப்படம் இரண்டாவது நாள் முடிவில், தமிழகத்தில் மற்றும் 3 கோடி முதல் 4 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'டிமான்டி காலனி' முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து ஹாலிவுட் லெவலுக்கு மிரட்டலான காட்சிகளுடன் எடுத்துள்ளார். மேலும் பிரியா பவானி ஷங்கர் இதுவரை நடித்த படங்களை விட மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரமேஷ் திலக், சமந்த், எம் எஸ் பாஸ்கர், மதுமிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரகு தாத்தா' 35 லட்சம் மட்டுமே இரண்டாவது நாளில் வசூலித்துள்ளது. மேலும் 'தங்கலான்' மற்றும் 'டிமான்டி காலனி 2' ஆகிய இரண்டு படங்களுக்குமே வசூல் ரீதியாக கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் தங்கலான் பட்ஜெட்டை விட, டிமான்டி காலனி திரைப்படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு என்பதால்... வசூல் ரீதியாக எந்த படம் லாபத்தை பெரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.