கோடியில் சம்பளம் என்ன பிரோஜயனம்? நிறைவேறாத கனவுடன் நடிகராக மாறிய ஆர்யா!
தன்னுடைய கனவை அடைய முடியாமல் சாஃப்ட் வேர் என்ஜினீயராக பணியாற்றி பின்னர் திரையுலகில் அறிமுகமாகி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட நடிகர் ஆர்யா பற்றிய அரிய தகவல்கள் இதோ.
Actor Arya
கேரள மாநிலம் காசர்கோடில் பிறந்தவர் தான் ஆர்யா. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜம்ஷாத் செத்திரகாத். ஒரு மலையாள தமிழ் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இவர் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். வண்டலூரில் உள்ள பிரபல கல்லூரியில் தனது பொறியியல் பட்டப்படிப்பைத் முடித்த ஆர்யா... முதலில் ஒரு பைலட்டாகவே விரும்பினார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், கணினி பொறியாளராக பணிபுரிந்தார்.
Arya Movies
மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கவனம் செலுத்த துவங்கிய ஆர்யா, 2005-ஆம் ஆண்டு 'அறியும் அறியாமலும்' திரைப்படத்தில் அறிமுகமானார். இது அவருக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. பின்னர் 'உள்ளம் கேட்குமே', 'ஒரு கல்லூரியின் கதை', 'கலாப காதலன்', 'பட்டியல்', 'வட்டாரம்', 'மாய கண்ணாடி' போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த 'நான் கடவுள்' திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த படத்திற்க்காக பல்வேறு விருதுகளை வாங்கினார் ஆர்யா. ஆனால் இப்படத்திற்காக தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றமே.
Arya Brother Movie
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யாவை தொடர்ந்து, இவருடைய சகோதரர் சத்யாவும் 'அமரர் காவியம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தை ஆர்யாவே தயாரித்திருந்த நிலையில், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. சத்யா ஒரு சில படங்களில் மட்டுமே நடந்திருந்தாலும், ஒரு தொழிலதிபராகவும் உள்ளார்.
Engal veetu Mappillai
ஆர்யா 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சி மூலம், திருமணத்திற்கு போட்டி வைத்து பெண் தேடிய நிலையில், கடைசியில் இறுதியில் தேர்வு செய்யப்பட்ட 3 பெண்களையும் திருமணம் செய்து கொள்ளாமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து பின் வாங்கினார். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட நிலையில், ஆர்யாவின் செயலால் இந்த நிகழ்ச்சி ஒரேயடியாக இழுத்து மூடப்பட்டது.
எனக்கு சுயமரியாதை இருக்கிறது! அம்பானி வீட்டு திருமணம... ரகசியத்தை உடைத்த அனுராக் காஷ்யாப் மகள்!
Arya and Sayyeesha Wedding
இதை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு கஜினிகாந்த் படத்தில், தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஜூலை 2021 இல், இவர்களுக்கு அரியானா என்கிற மகள் ஒருவரும் பிறந்தார். திருமணத்திற்கு முன்னர் ஏகப்பட்ட சர்ச்சையில் ஆர்யா சிக்கி இருந்தாலும்... திருமணத்திற்கு பின்னர் மிஸ்டர் பர்ஃபெட்டக மாறி விட்டார்.
Arya Pilot Dream
ஷூட்டிங், ஒர்க் அவுட், சைக்ளிங் போன்றவற்றிலும்... நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் இருப்பதையே விரும்புகிறார். ஆர்யா இன்று தான் நடிக்கும் படம் ஒன்றுக்கு... சுமார் 12 முதல் 15 கோடி வரை சம்பவம் பெரும் நட்சத்திரமாக இருந்தாலும், தன்னுடைய பைலட் கனவு நிறைவடையவில்லை என்கிற வருத்தம் எப்போதும் உண்டு என கூறியுள்ளார்.
பாரதி ராஜாவின் முதல் பட ஹீரோயின் ஜெயலலிதாவா? டேக் ஆஃப் ஆகாமல் போன ஹிட் படம்!
Arya New Film
ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், முரளி கோபி எழுதி, ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், இன்னும் பெயரிடப்படாத இப்படம் மலையாளம்-தமிழ் இருமொழிகளில் உருவாகிறது, இதில் சந்தி பாலச்சந்திரன், நிகிலா விமல், சரிதா குக்கு, இந்திரன்ஸ், சித்திக், ரெஞ்சி பணிக்கர் மற்றும் அப்பானி சரத் உள்ளிட்ட பலதரப்பட்ட நடிகர்கள் நடிக்க உள்ளனர்.