ஒரே நாளில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்கள்!

Published : Aug 17, 2024, 02:53 PM IST

சின்னத்திரை வாயிலாக ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட, மூன்று முக்கிய சீரியல்கள் இன்று ஒரே நாளில் முடிவுக்கு வர உள்ளது. இந்த தகவல் சீரியல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

PREV
14
ஒரே நாளில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்கள்!
TV Serials

ஒவ்வொரு வாரமும் மூன்று முதல், நான்கு திரைப்படங்கள் வெள்ளித்திரையில் வெளியானாலும்... சின்னத்திரை மூலம், புதிய கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதிலும் சமீப காலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், இல்லத்தரசிகளே கடந்து இளவட்ட ரசிகர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது. 
 

24
Vanathai Pola

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அண்ணன் - தங்கை பாசக்கதையான 'வானத்தப் போல' தொடர், இன்றைய தினம் முடிவடைய உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு வருடங்களாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இன்று முதல் முடிவடைய உள்ளது. இந்த சீரியல் தொடங்கிய போது, ஹீரோ சின்ன ராசு கதாபாத்திரத்தில் தமன்குமார் நடிக்க, துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா கெல்ஜ் நடித்து வந்தார். இவர்கள் இருவருமே ஒரே நேரத்தில் சீரியலை விட்டு விலகிய நிலையில், ஸ்ரீகுமார் சின்ன ராசு கதாபாத்திரத்திலும், மானிய ஆனந்த் துளசி கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தமாகினர்.TRP-யில் தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து வந்த இந்த சீரியல், திடீரென முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவல் 'வானத்தைப் போல' சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களை சற்று கவலையடைய வைத்துள்ளது.

வசூலில் 'தங்கலானை' மிஞ்சிவிட்டதா 'டிமான்டி காலனி 2'? 2-வது நாள் வசூல் விவரம்!

34
Indira Serial

இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்திரா தொடர் முடிவுக்கு வருகிறது. ரொமான்டிக் ட்ராமாவாக எடுக்கப்பட்டு வந்த இந்த சீரியல், பல தடைகளை தாண்டி காதலில் இணையும் இரு நெஞ்சங்கள் சந்திக்கும் பிரச்சனையை, விறுவிறுப்பான கதைக்களத்துடன் ரசிகர்கள் கண் முன் நிறுத்தியது. 2022-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் 2 வருடம் நிறைவடைவதற்கு முன்பே முடிவுக்கு வருகிறது. இந்த சீரியலில், Fouzil Hidhayah கதாநாயகியாக நடிக்க, குக் வித் கோமாளி அக்ஷய் கமல் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே, TRP-யில் டல்லடித்து வந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வருகிறது.
 

44
Sandakozhi

அதை போல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த மற்றொரு முக்கிய தொடரான, சண்டக்கோழி சீரியலும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், ஒரே வருடத்தில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியலில் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில்,  நியாஸ் கான் ஹீரோவாக நடித்து வந்தார். ஆரம்பத்தில் இருந்தே சண்டையில் முட்டி கொள்ளும் இருவர் சூழ்நிலை காரணமாக, திருமணம் செய்து கொள்ளும் நிலையில்... இருவரும் சேர்ந்து தங்களுக்கு வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கின்றனர்? மனதால் ஒன்றிணைந்து காதலிக்க துவங்குகிறார்கள்  என்பதை விறுவிறுப்பான கதையம்சத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. டிஆர்பிஎல் இடம்பிடிக்க போராடிய இந்த சீரியல்... மோசமான சரிவை சந்தித்ததால், தற்போது இந்த சீரியலை முடித்துவிட்டு புதிய சீரியலை தொடங்க ஜீ தமிழ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடியில் சம்பளம் என்ன பிரோஜயனம்? நிறைவேறாத கனவுடன் நடிகராக மாறிய ஆர்யா!

Read more Photos on
click me!

Recommended Stories