பிக்பாஸ் சீசன் 8: ஷாலின் ஷோயா, கல்பனா கலந்துகொள்ள வாய்ப்பு?

First Published | Aug 17, 2024, 3:13 PM IST

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஷாலின் ஷோயா, பாடகி கல்பனா, நடிகர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Bigg Boss Season 8 Contestants

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சீசன் 5 பிரபலம் ஷாலின் ஷோயா, பாடகி கல்பனா, நடிகர் அருண், ரோபோ சங்கர், ரியாஸ் கான் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Bigg Boss Season 8 Contestants

ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நூறு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். இதுவரையில் 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 8ஆவது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Tap to resize

Bigg Boss Season 8 Contestants

ஆனால், பிக்பாஸ் சீசன் 8ஐ கமல் ஹாசன் தொகுத்து வழங்கவில்லையாம். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவரோ பிஸியாக இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டாராம்.

Bigg Boss Season 8 Contestants

இந்த நிலையில் தான் கடைசியாக விஜய் டிவியின் கண்ணானது விஜய் சேதுபதி பக்கம் திரும்பியிருக்கிறது. அவரிடம் கேட்டதற்கு அவரும் சம்மதம் சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

bigg boss tamil 8

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட ஷாலின் ஷோயா பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவரது வெகுளித்தனம்.

Bigg boss tamil

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வெகுளியான பேச்சால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். பேச்சு, நடை, உடை, பாவணை என்று எல்லாவற்றின் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். ஆதலால், அவர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

Bigg Boss Season 8 Contestants

இவர்கள் வரிசையில் விஜய் டிவி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான பரீனா, பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண், ரியாஸ் கான், அமலா ஷாஜி, பாடகி கல்பனா, நடிகர் அஸ்வின், பப்லு பிரித்விராஜ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக உச்சம் தொட்ட பிரபலங்களின் பட்டியலில் சீரியன் நடிகை தாமரையும் ஒருவர்.

Bigg Boss Season 8 Contestants

ரைசா, ஓவியா, ஜூலி, ரித்விகா, முகேன், லாஸ்லியா, ஷெரின், கவின், தர்ஷன், ரேஷ்மா, ஆரி, ரியோ, பவானி, அமீர் ஆகியோர் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்துள்ளனர். சினிமாவிலும், சீரியல்களிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் பெற்று நடித்து வருகின்றனர்.

Latest Videos

click me!