கடந்த 2006ம் ஆண்டு தமிழில் வெளியான "சித்திரம் பேசுதடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் மிஷ்கின். அதற்கு முன்னதாக பல திரைப்படங்களில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தனக்கென ஒரு தனி பாதை அமைத்து, அதில் பயணித்து வரும் மிஷ்கின், இந்த 18 ஆண்டுகளில் 9 திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிசாசு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை அந்த திரைப்படம் பெற்றது. இந்த சூழலில் தான் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சில வருடங்களுக்கு முன்பு எடுக்கத் தொடங்கினார் மிஷ்கின். நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அந்த திரைப்படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
34
Actress Andrea Jeremiah
ஆனால் அப்படத்தில் வரும் ஒரு காட்சியில், பிரபல நடிகை ஆண்ட்ரியா ஆடையின்றி நிர்வாணமாக நடித்திருப்பதால், அப்பிடத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியது. உடனடியாக அப்படத்தை தயாரித்த நிறுவனம், அதை வெளியிட தயங்கியது. மேலும் அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டு அப்படம் வெளியாகும் என்றும் நம்பப்பட்டது.
44
Andrea jeremiah
ஆனால் அதன் பிறகு "துப்பறிவாளன்" மற்றும் "சைக்கோ" என்று இரு திரைப்படங்களை இயக்கி முடித்த மிஷ்கின், தற்பொழுது டிரெயின் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் கூட பிசாசு 2 வெளியாகவில்லை. இந்நிலையில் பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசிய மிஷ்கின், படத்தின் தயாரிப்பாளர் ஆரம்ப கட்டத்தில் இப்படத்தை வெளியிட சற்று பயந்து வந்தார். ஆனால் தற்பொழுது பல மாற்றங்கள் படத்தில் செய்யப்பட்டு வருகிறது, ஆகவே இந்த ஆண்டுக்குள் அல்லது 2025ம் ஆண்டு பிசாசு 2 திரையரங்குகளில் வெளியாகும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.